பிரதமர் அலுவலகம்
பிரதமர் தனது தாயாருக்கு அஞ்சலி
प्रविष्टि तिथि:
30 DEC 2022 7:44AM by PIB Chennai
நூற்றாண்டு கண்ட தனது தாயின் ஆன்மா இறைவனின் பாதங்களில் அமைதி அடைந்துள்ளது என்றார் பிரதமர் திரு.நரேந்திர மோடி.
திருமதி ஹீராபென் இன்று காலமானதையடுத்து கடவுளின் திருமூர்த்தி ஸ்வரூபமாகிய அவருடைய இறையம்சம் கொண்ட வாழ்க்கைப் பயணத்தையும், தன்னலமற்ற கர்மயோகியாகவும், முக்கியத் தத்துவங்களுக்கு தனது வாழ்வை அர்ப்பணித்ததையும் பிரதமர் நினைவுகூர்ந்தார்.
தனது நூற்றாண்டு பிறந்தநாளில் ஞானத்தோடு செயல்பட வேண்டுமென்றும், பரிசுத்த வாழ்க்கையை மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர் கூறிய அறிவுரைகளை பிரதமர் நினைவு கூர்ந்தார்.
பிரதமர் தனது ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:
“மேன்மை பொருந்திய நூற்றாண்டு கண்ட ஆன்மா இறைவனின் பாதங்களில் இளைப்பாறுகிறது. இறையம்சம் கொண்ட அவர் வாழ்க்கைப் பயணம், தன்னலமற்ற கர்மயோகி செயல்பாடுகள் மற்றும் முக்கியத் தத்துவங்களுக்கு தனது வாழ்வை அர்ப்பணித்தார்.
அவரது நூற்றாண்டு பிறந்தநாளில் அவரை நான் சந்தித்தபோது, ஒன்றை குறிப்பிட்டுச் சொன்னார். அதாவது அறிவாற்றலுடன் பணிபுரிய வேண்டுமென்றும், தூய்மையான வாழ்க்கையை மேற்கொள்ள வேண்டும் என்றும் கூறினார்”.
***
(Release ID: 1887428)
AP/GS/RR/KRS
(रिलीज़ आईडी: 1887477)
आगंतुक पटल : 256
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Manipuri
,
Assamese
,
Bengali
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam