அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை
புத்தொழில்கள் பயனடைவதற்காக 2023 ஜனவரி 1 முதல் தொழில்நுட்ப வணிகமயமாக்கலை தேசிய ஆராய்ச்சி மேம்பாட்டுக் கழகம் மேற்கொள்ளும் என்று மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் கூறியுள்ளார்
Posted On:
29 DEC 2022 4:36PM by PIB Chennai
புத்தொழில்கள் பயனடைவதற்காக 2023 ஜனவரி 1 முதல் தொழில்நுட்ப வணிகமயமாக்கலை தேசிய ஆராய்ச்சி மேம்பாட்டுக் கழகம் மேற்கொள்ளும் என்று மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை இணை அமைச்சர் (தனி பொறுப்பு); புவி அறிவியல் துறை இணை அமைச்சர் (தனி பொறுப்பு); பிரதமர் அலுவலகம், பணியாளர் நலன், பொதுமக்கள் குறைதீர்த்தல், ஓய்வூதியங்கள், அணுசக்தி மற்றும் விண்வெளித் துறை இணை அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார்.
புதுதில்லியில் உள்ள சிஎஸ்ஐஆர் மையத்தில் நடைபெற்ற அறிவியல் மற்றும் தொழில்கள் ஆராய்ச்சித்துறை (டிஎஸ்ஐஆர்) செயலாளர், மற்றும் தேசிய ஆராய்ச்சி மேம்பாட்டுக் கழக (என்ஆர்டிசி) த்தின் மூத்த அதிகாரிகளுடனான சந்திப்புக்குத் தலைமை வகித்த டாக்டர் ஜிதேந்திர சிங், 1953ல் இந்த அமைப்பு தொடங்கப்பட்டதிலிருந்து, ஏறத்தாழ அனைத்துத் தொழில் துறைகளிலும் தொழில்நுட்பங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் 5000க்கும் அதிகமான உரிம ஒப்பந்தங்களை என்ஆர்டிசி முடித்துள்ளது என்றார். இந்தியாவில் 2000க்கும் அதிகமான காப்புரிமைகளை தாக்கல் செய்வதற்கும் இது உதவியுள்ளது என்று அமைச்சர் கூறினார்.
மத்திய அரசால் நீடிக்கப்பட்ட பலன்களைப் பெறுவதற்கு தொழில்நுட்ப ரீதியாக புத்தொழில்களை மதிப்பீடு செய்ய தொழில் மற்றும் உள்நாட்டு வர்த்தக மேம்பாட்டுத் துறை (டிபிஐஐடி)யின் அமைச்சகங்களுக்கு இடையேயான வாரியங்களுக்கு என்ஆர்டிசி உதவுகிறது என்றும் இதுவரை புத்தொழில்களின் 7500 விண்ணப்பங்கள் மதிப்பீடு செய்யப்பட்டுள்ளன என்றும் டாக்டர் ஜிதேந்திர சிங் கூறினார்.
இந்திய எண்ணெய்க்கழகத்துடன் இணைந்து புத்தொழில்களை அடையாளம் காண்பது மற்றும் கைகோர்த்து தயாரிப்பு தொடங்குவது வரை தங்கள் புத்தொழில் திட்டத்தை என்ஆர்டிசி செயல்படுத்துகிறது என்று டாக்டர் ஜிதேந்திர சிங் கூறினார்.
விவசாய அடிப்படையிலான ஏற்றுமதி சார்ந்த புத்தொழில்களுக்கு வழிகாட்டுதல் மற்றும் கண்காணிப்புக்காக வேளாண் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்கள் ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையத்துடன் என்ஆர்டிசி புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளதையும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1887321
****
AP/SMB/KRS
(Release ID: 1887373)
Visitor Counter : 185