நிலக்கரி அமைச்சகம்
azadi ka amrit mahotsav

ரூ.300 கோடி அங்குல்-பல்ராம் ரயில் இணைப்பு தொடங்கிவைக்கப்பட்டது

प्रविष्टि तिथि: 29 DEC 2022 4:00PM by PIB Chennai

தல்சார் நிலக்கரி வயல்களில் இருந்து நிலக்கரியை வெளியே கொண்டு வரும் 14 கி.மீ. நீள அங்குல்-பல்ராம் ரயில் இணைப்பு இன்று தொடங்கிவைக்கப்பட்டது.  தினசரி 40 ஆயிரம் டன் என்ற நிலக்கரியை கொண்டு செல்லும்  மகாநடி நிலக்கரி வயல்கள் நிறுவனத்தின் திறனை அதிகரிக்க இது வகைசெய்கிறது. ரூ.300 செலவில் உருவாக்கப்பட்ட இந்த ரயில் இணைப்பு தினசரி 10 பெட்டிகள் அளவுக்கு நிலக்கரியை கூடுதலாக கொண்டு செல்லக்கூடியதாகும்.

இந்த ரயில் இணைப்பை மத்திய நிலக்கரி, சுரங்கம் மற்றும் நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் திரு பிரலாத் ஜோஷி, மத்திய கல்வி, திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் திரு தர்மேந்திர பிரதான், ரயில்வே அமைச்சர் திரு அஸ்விணி வைஷ்ணவ் ஆகியோர் தொடங்கிவைத்தனர்.

அங்குல்-பல்ராம் ரயில் இணைப்பு, 68 கி.மீ. தூர உள்வழித்தடம்- அங்குல்-பல்ராம்-புதுக்கடியா ஜராபதா-டென்டுலோய் ரயில் இணைப்பின் முதல் கட்டமாகும்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1887304

*****

AP/PKV/AG/KRS


(रिलीज़ आईडी: 1887329) आगंतुक पटल : 188
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: Odia , English , Urdu , Telugu