சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்
மத்திய சுகாதார அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியா, தேசிய மருத்துவ ஆணையச் சட்டம், 2019ல் குறிப்பிடப்பட்டுள்ள நடைமுறையின்படி, தேசிய மருத்துவ ஆணையம், தன்னாட்சி வாரியங்கள் மற்றும் தேடல் குழுவின் பகுதி நேர உறுப்பினர்களை குலுக்கல் முறையில் தேர்ந்தெடுத்தார்
Posted On:
28 DEC 2022 4:58PM by PIB Chennai
மாநில/யூனியன் பிரதேச அரசுகளின் 10 பகுதி நேர உறுப்பினர்கள், மாநில மருத்துவ கவுன்சிலில் இருந்து 9 பகுதி நேர உறுப்பினர்கள், ஒவ்வொரு தன்னாட்சி வாரியத்தின் நான்காவது உறுப்பினர், மற்றும் தேடல் குழுவிற்கான ஒரு நிபுணர் ஆகியோர் அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு நியமிக்கப்பட்டுள்ளனர்.
மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியா, தேசிய மருத்துவ ஆணையம், தன்னாட்சி வாரியங்கள் மற்றும் தேடல் குழுவின் பகுதி நேர உறுப்பினர்களை குலுக்கல் மூலம் தேர்ந்தெடுத்து நியமனம் செய்யும் முறையில் பங்கேற்றார். இந்நியமன நடைமுறை, தேசிய மருத்துவ ஆணைய சட்டம், 2019 இல் குறிப்பிடப்பட்டுள்ளது.
தேசிய மருத்துவ ஆணைய சட்டம் 2019 இன்படி, இந்த நியமனங்கள் இரண்டு ஆண்டுகளுக்கு பொருந்தும். பல்வேறு மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்த உறுப்பினர்கள் பின்வரும் பிரிவுகளில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்:
மருத்துவ ஆலோசனைக் குழுவிலிருக்கும் மாநில/யூனியன் பிரதேச பரிந்துரைப்பாளரிடமிருந்து 10 தேசிய மருத்துவ ஆணைய பகுதி நேர உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்: அசாம், அருணாச்சல பிரதேசம், சத்தீஸ்கர், புதுச்சேரி, உத்தரகாண்ட், லடாக், சிக்கிம், தெலுங்கானா, கர்நாடகா மற்றும் கேரளா.
மருத்துவ ஆலோசனைக் குழுவிலிருக்கும் மாநில மருத்துவக் குழுவின் பரிந்துரைப்பாளரிடமிருந்து 9 தேசிய மருத்துவ ஆணைய பகுதி நேர உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்: ஆந்திரப் பிரதேசம், ஹரியானா, கோவா, குஜராத், டெல்லி, ஒடிசா, இமாச்சலப் பிரதேசம், பஞ்சாப் மற்றும் ராஜஸ்தான்
மாநில மருத்துவக் குழுவின் பரிந்துரைப்பாளரிடமிருந்து ஒவ்வொரு தன்னாட்சி வாரியத்தின் நான்காவது உறுப்பினர் (பகுதி நேர உறுப்பினர்) தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
(அ) இளங்கலை மருத்துவக் கல்வி வாரியத்திற்கு: மகாராஷ்டிரா
(ஆ) முதுகலை மருத்துவக் கல்வி வாரியத்திற்கு: தமிழ்நாடு
(இ) மருத்துவ மதிப்பீ்டு மற்றும் மதிப்பீட்டு வாரியம்: உத்தரப் பிரதேசம்
(ஈ) நெறிமுறைகள் மற்றும் மருத்துவப் பதிவு வாரியம்: பீகார்
தமிழகத்திலிருந்து முதுகலை மருத்துவக் கல்வி வாரியத்திற்க்கு
டாக்டர். செந்தில் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
ஒடிசாவைச் சேர்ந்த நிபுணர் ஒருவர் தேடல் குழுவிற்கு பரிந்துரைக்கப்பட்டார்.
குலுக்கல் முறையில் உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதில் வெளிப்படைத்தன்மையைப் பேணுவதற்காக, நிகழ்வைப் பதிவுசெய்ய ஊடகவியலாளர்களும் உடனிருந்தனர்.
திரு ராஜேஷ் பூஷன், மத்திய சுகாதார செயலாளர், டாக்டர் மனோகர் அக்னானி,
கூடுதல் செயலாளர் டாக்டர் சச்சின் மிட்டல், இணைச்செயலாளர் மற்றும் சுகாதார அமைச்சக அதிகாரிகள் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
மேலும் தகவல்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1887077
SM/IR/RKM/KRS
(Release ID: 1887145)
Visitor Counter : 237