அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை
ஆண்டுக் கண்ணோட்டம் – 2022: சிஎஸ்ஐஆர் (அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகம்)
प्रविष्टि तिथि:
28 DEC 2022 11:50AM by PIB Chennai
பிரதமர் தலைமைதாங்கிய சிஎஸ்ஐஆர் மன்றக் கூட்டம்
2022 அக்டோபர் 15 அன்று நடைபெற்ற சிஎஸ்ஐஆர் மன்றக் கூட்டத்திற்குப் பிரதமரும் சிஎஸ்ஐஆர் தலைவருமான திரு நரேந்திர மோடி தலைமை தாங்கினார். இதில் சிஎஸ்ஐஆர் துணைத் தலைவரும் மத்திய அறிவியல் தொழில்நுட்பத் துறை (தனிப்பொறுப்பு) இணை அமைச்சருமான டாக்டர் ஜிதேந்திர சிங், மத்திய தொழில் வர்த்தகத்துறை அமைச்சர் திரு பியூஷ் கோயல், பிரபல விஞ்ஞானிகள், தொழில் துறையினர், மத்திய அரசு அதிகாரிகள் கலந்துகொண்டனர். இந்தக் கூட்டத்தில் சிஎஸ்ஐஆர்-ன் அண்மைக்கால சாதனைகள், பங்களிப்புகள் பற்றி அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சித்துறை செயலாளர் டாக்டர் என்.கலைச்செல்வி அறிக்கை சமர்ப்பித்தார். தேசிய நோக்கங்கள் மற்றும் தொலைநோக்கு 2047க்கு இணக்கமான சிஎஸ்ஐஆர் தொலைநோக்குப் பார்வை 2030க்கான திட்ட முன்மொழிவையும் அவர் சமர்ப்பித்தார்.
கடந்த 80 ஆண்டுகளில் சிஎஸ்ஐஆர் மேற்கொண்ட முயற்சிகளைப் பாராட்டிய பிரதமர், சிஎஸ்ஐஆர்-க்கு 100 ஆண்டுகள் நிறைவடையும் 2042 ஆம் ஆண்டிற்கான தொலைநோக்குப் பார்வையை உருவாக்க வலியுறுத்தினார்.
ஹைட்ராசைன் ஹைட்ரேட் உற்பத்தியை அதிகரிப்பதற்கான ஆலை திறப்பு விழா
தற்சார்பு இந்தியா நோக்கிய முன்முயற்சியாக, சிஎஸ்ஐஆர், ஹைதராபாதில் உள்ள இந்திய வேதியியல் தொழிநுட்பக் கல்விக் கழகம், குஜராத் அல்கலீஸ் அண்ட் கெமிக்கல்ஸ் லிமிடெட் ஆகியவற்றின் ஒத்துழைப்புடன் உருவாக்கப்பட்ட ஹைட்ராசைன் ஹைட்ரேட் உற்பத்தி அதிகரிப்புக்கான ஆலையை திரு நரேந்திர மோடி அக்டோபர் 10, 2022 அன்று திறந்து வைத்தார்.
சார்ஸ் -கோவ் -2 பரவலைத் தணிப்பதற்கான கிருமிநாசினி தொழில்நுட்பங்கள் குறித்த சிஎஸ்ஐஆர் வழிகாட்டுதல்கள் வெளியீடு
சார்ஸ் -கோவ் -2 பரவலைத் தணிப்பதற்கான கிருமிநாசினி தொழில்நுட்பங்கள் குறித்த சிஎஸ்ஐஆர் வழிகாட்டுதல்களை மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை இணை அமைச்சர் (தனிப் பொறுப்பு) டாக்டர் ஜிதேந்திர சிங் வெளியிட்டார். சார்ஸ் -கோவ் -2-ன் காற்றுவழிப் பரவுதல் மற்றும் கொவிடுக்குப் பிந்தைய காலத்திலும் இது தொடர்புடையதாக இருக்கும். ரயில்வே, ஏசி பேருந்துகள் மற்றும் நாடாளுமன்ற வளாகத்தில் கூட இந்த தொழில்நுட்பம் வெற்றிகரமாகப் பயன்படுத்தப்பட்டு, இப்போது பொது மக்களின் பயன்பாட்டிற்காகத் திறக்கப்பட்டுள்ளது.
புது தில்லியில் உள்ள சிஎஸ்ஐஆர் தேசிய இயற்பியல் ஆய்வகம் (என்பிஎல்), தனது பவள விழாவைக் கொண்டாடி சிறப்பு அஞ்சல் தலையை வெளியிட்டது.
சிஎஸ்ஐஆர் ஆய்வகங்களான, தேசிய அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் மேம்பாட்டு ஆய்வுகள் மற்றும் தேசிய அறிவியல் தொடர்பு நிறுவனம் மற்றும் தகவல் வளங்கள் இணைக்கப்பட்டு தேசிய அறிவியல் தொடர்பு மற்றும் கொள்கை ஆராய்ச்சி நிறுவனம் அமைக்கப்பட்ட பின் முதலாவது நிறுவக தின தொடக்க விழா , 2022, ஜனவரி 13 அன்று நடைபெற்றது.
சிஎஸ்ஐஆர்-சிஎல்ஆர்ஐ பவளவிழாவைக் கொண்டாடின
சென்னையில் சிஎஸ்ஐஆர்-சிஎல்ஆர்ஐ- இன் பவளவிழா கொண்டாட்டங்களை மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் 2022,மே 19 அன்று தொடங்கிவைத்தார். இவ்விழாவில் உரையாற்றிய டாக்டர் ஜிதேந்திர சிங், 1948 முதல் சென்னையில் சிஎல்ஆர்ஐ- இன் பரிணாம வளர்ச்சியை எடுத்துரைத்தார். அடுத்த 25 ஆண்டுகளில், இந்திய தோல் ஆராய்ச்சி மற்றும் தொழில்துறை நவீனமயமாக்கல் மற்றும் சுற்றுச்சூழல் தயார்நிலையை மேம்படுத்துவதில் கவனம் செலுத்த வேண்டியுள்ளது என்றும் அவர் கூறினார்.
சிஎஸ்ஐஆர்-செக்ரி - இன் 75வது நிறுவக தின விழா
2022, ஜூலை 25 அன்று நடைபெற்ற சிஎஸ்ஐஆர்-செக்ரி - இன் 75வது நிறுவக தின விழாவில் பேசிய இதன் இயக்குனர் டாக்டர் என்.கலைச்செல்வி, லித்தியம்-அயன் மின்கலங்கள் உருவாக்கியதற்காக நோபல் பரிசு பெற்ற பேராசிரியர் ஜான் பன்னிஸ்டர் குடெனஃபின் 100வது பிறந்தநாளும் ஒருங்கிணைவது பற்றி குறிப்பிட்டார்.
சுற்றுச்சூழல்-புதிய கண்டுபிடிப்புக்கான தங்க மயில் விருது – 2022
தேசிய அறிவுசார் சொத்து விருதுகள் 2021 & 2022க்கு கழிவுநீரில் சார்ஸ்-கோவ் -2 வைரஸுக்கான சூழல் கண்காணிப்புக்காக, சுற்றுச்சூழல்-புதிய கண்டுபிடிப்புக்கான தங்க மயில் விருது – 2022 -ஐ சிஎஸ்ஐஆர் வென்றது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1887009
**************
(Release ID: 1887009)
SM/SMB/RJ/KRS
(रिलीज़ आईडी: 1887123)
आगंतुक पटल : 350