மத்திய பணியாளர் தேர்வாணையம்

இந்திய பொருளாதார பணி/இந்திய புள்ளியியல் பணி தேர்வு, 2022

Posted On: 28 DEC 2022 3:49PM by PIB Chennai

மத்திய பணியாளர் தேர்வு ஆணையத்தால் இந்திய பொருளாதார பணி/  இந்திய புள்ளியியல் பணிக்காக 2022, ஜூன் 24 முதல் 26ம் தேதி வரை நடத்தப்பட்ட எழுத்துத்தேர்வு அடிப்படையிலும், அதைத்தொடர்ந்து, 2022 டிசம்பர் 19முதல் 23ம் தேதி வரை நடத்தப்பட்ட நேர்முகத்தேர்வின் அடிப்படையிலும், தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

இந்திய பொருளாதாரப் பணிக்கு பொதுப்பிரிவைச்சேர்ந்த 8 பேர், பொருளாதாரத்தில் பின் தங்கிய பிரிவில் 2 பேர், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த 7 பேர், ஷெடியூல்டு பிரிவில் 4 பேர், பழங்குடியினர் 2 பேர் என மொத்த 23 பேரை பணியில் அமர்த்த பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

இந்திய புள்ளியியல் பணிக்கு பொதுப்பிரிவைச்சேர்ந்த 7 பேர், பொருளாதாரத்தில் பின் தங்கிய பிரிவில் 5 பேர், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பைச்சேர்ந்த 11 பேர், ஷெடியூல்டு பிரிவைச்சேர்ந்த 4 பேர், பழங்குடியினர் 2 பேர் என மொத்தம் 29 பேரை பணியில் அமர்த்த பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

இந்திய பொருளாதார பணிக்கான தேர்வில் பங்கேற்ற 3பேரின் தேர்வு முடிவுகளும், இந்திய புள்ளியியல் பணிக்கான தேர்வில் பங்கேற்ற 6 பேரின் தேர்வு முடிவுகளும் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. அவர்களுடைய அசல் சான்றிதழ்கள் சரிபார்க்கப்படும் வரை பணி நியமனக்கடிதங்கள் வழங்கப்படமாட்டாது என அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்வு முடிவுகளை www.upsc.gov.in என்ற இணையதளத்தில் அறிந்துகொள்ளலாம்.

**************

SM/IR/RS/GS



(Release ID: 1887071) Visitor Counter : 122


Read this release in: English , Urdu , Hindi , Marathi