பழங்குடியினர் நலத்துறை அமைச்சகம்
தமிழகத்தில் நரிக்குறவர் மற்றும் குருவிக்காரன் சாதிகளை பழங்குடியினர் பட்டியலில் சேர்ப்பதற்கு வகைசெய்யும் மசோதா நாடாளுமன்றத்தில் குளிர்கால கூட்டத் தொடரில் நிறைவேற்றப்பட்டது
Posted On:
27 DEC 2022 4:56PM by PIB Chennai
தமிழகத்தில் நரிக்குறவர் மற்றும் குருவிக்காரர் சாதிகளை பழங்குடியினர் பட்டியலில் சேர்ப்பதற்கு வகைசெய்யும் மசோதா நாடாளுமன்றத்தில் குளிர்கால கூட்டத் தொடரில் நிறைவேற்றப்பட்டது.
இந்த மசோதா மக்களவையில் 15.12.2022 அன்று நிறைவேற்றப்பட்டது. இதனைத் தொடர்ந்து 22.12.2022 அன்று மாநிலங்களவையில் ஒருமனதாக இந்த அரசியல் சாசன திருத்த சட்டம் நிறைவேறியது. இதனையடுத்து பழங்குடியினர் பட்டியலில் தமிழகத்தைச் சேர்ந்த நரிக்குறவர் மற்றும் குருவிக்காரர் சமுதாயத்தினர் பழங்குடியினர் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இதே போல கர்நாடக மாநிலத்தில் பெட்டா – குருபா, உத்தரப்பிரதேசத்தின் துரியா, நாயக், ஓஜா, பத்தாரி, ராஜ்கோண்ட் ஆகிய சாதியினரை பழங்குடியினர் பட்டியலில் சேர்ப்பதற்கான 2 மசோதாக்களும் இந்த கூட்டத் தொடரில் நிறைவேற்றப்பட்டன.
பழங்குடியினர் மற்றும் ஒடுக்கப்பட்ட சமுதாயத்தினரின் மேம்பாட்டுக்காக பிரதமர் திரு நரேந்திர மோடி அங்கீகாரம் அளித்துள்ளார் என்று மத்திய அமைச்சர் திரு அர்ஜூன் முண்டா கூறியுள்ளார்.
**************
SM/PKV/AG/RJ
(Release ID: 1886914)
Visitor Counter : 385