தொலைதொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம்

தொலைத்தகவல் தொடர்பு சாதனத் தயாரிப்பாளர்களுக்கு சந்தை ஆதரவை வழங்குவதற்கான பணிக்குழு

Posted On: 23 DEC 2022 1:27PM by PIB Chennai

சீனாவில் இருந்து தொலைத்தகவல் தொடர்பு சாதனங்களை இறக்குமதி செய்வது தொடர்பாக இவற்றின்  தயாரிப்பாளர்களிடமிருந்து கோரிக்கைகள் பெறப்பட்டுள்ளன. இருப்பினும், கொள்முதலில் ஏலம் எடுப்பதற்குத் தகுதிபெற, இந்தியாவுடன் நில எல்லையைப் பகிர்ந்து கொள்ளும் நாடுகளில் இணைக்கப்பட்ட/ நன்மை பயக்கும் உரிமையைக் கொண்ட நிறுவனங்களின் பதிவுகளை அரசு கட்டாயமாக்கியுள்ளது. மேலும், இறக்குமதி செய்யப்பட்ட பொருட்களை தவறாக லேபிலிடுவதைத் தவிர்ப்பதற்காக, எச்எஸ் குறியீடுகளை ஒழுங்குபடுத்துவதற்கும் வகைப்படுத்துவதற்கும் அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

மேலும், உற்பத்தியுடன்  இணைந்த ஊக்கத்தொகை  மற்றும் பொதுக் கொள்முதல் (இந்தியாவில் தயாரிப்பதற்கு முன்னுரிமை)  போன்ற திட்டங்கள் மூலம் உள்நாட்டு தொலைத்தகவல் தொடர்பு சாதனங்கள் உற்பத்தித் துறை ஊக்குவிக்கப்படுகிறது. (பிஎல்ஐ) திட்டம் நாட்டிற்குள் தொலைத்தகவல் தொடர்பு மற்றும் நெட்வொர்க்கிங் சாதனங்கள் உற்பத்தியை ஊக்குவிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. அதேசமயம் பிபிபி-எம்ஐஐ கொள்கை,  உள்நாட்டு உற்பத்தியாளர்களுக்கு பொதுக்  கொள்முதல் செய்வதில் முன்னுரிமை அளிக்கிறது. உள்நாட்டில் தயாரிக்கப்படும் சாதனங்களின் ஏற்றுமதியை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகளைப் பரிந்துரைக்க தொலைத்தொடர்புத் துறையால் நிபுணர் குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.

மாநிலங்களவையில் இன்று கேள்வி ஒன்றுக்கு எழுத்துபூர்வமாக அளித்த பதிலில் தகவல் தொடர்புத் துறை இணையமைச்சர் திரு தேவுசின் செளகான் இந்தத் தகவலைத் தெரிவித்தார்.

 

*****

SMB/GK



(Release ID: 1886026) Visitor Counter : 112


Read this release in: English , Urdu , Marathi , Telugu