நிலக்கரி அமைச்சகம்
என்எல்சி இந்தியா மருத்துவமனையில் நவீன இதயநோய் சிகிச்சை மையம் தொடங்கப்பட்டது
Posted On:
23 DEC 2022 11:43AM by PIB Chennai
என்எல்சி இந்தியா மருத்துவமனையில் நவீன இதயநோய் சிகிச்சை மையத்தை என் எல் சி இந்தியா நிறுவனத்தின் தலைவரும் மேலாண்மை இயக்குனருமான திரு ராகேஷ் குமார் தொடங்கிவைத்தார்.
என்எல்சி இந்தியா மருத்துவமனை மற்றும் பங்குதாரர்களால் பரிந்துரைக்கப்படும் நோயாளிகளுக்கு எந்தவகையான இதய நோய்க்கும் புறநோயாளி சேவைகள் மற்றும் உள்நோயாளி சிகிச்சை வழங்கத் தமிழ்நாட்டின் கடலூர் மாவட்டத்தில் அதிநவீன பரிசோதனைக்கூடமாக இது மட்டுமே உள்ளது. பொதுமக்களுக்கும் இது திறந்திருக்கும். ஆஞ்சியோக்ராம், அவசர சிகிச்சை மற்றும் புறப்பகுதி ஆஞ்சியோபிளாஸ்டி, பேஸ்மேக்கர் பொருத்துதல் மற்றும் பிற பரிசோதனைகளும் சிகிச்சைகளும் இங்கு மேற்கொள்ளப்படும்.
அனைத்து மருத்துவ அவசர சிகிச்சைகளையும் கையாளும் வகையில் இந்த மையம் உள்ளது. 25 படுக்கைகள் கொண்ட இந்த மையத்தில் (3 அவசர அறைகள், 6 சிசியூ, 2 மீட்புப் பகுதி, 5 வார்டுகள், 6 பகுதி தனியார் மற்றும் 3 ஒற்றை அறை படுக்கைகள் ) உட்பட அனைத்து வசதிகளும் உள்ளன. அடுத்தமாத வாக்கில் இவை அனைத்தும் முழுமையாக செயல்பாட்டுக்கு வரும்.
நெய்வேலி நகர்ப் பகுதியில் உள்ள மத்திய கட்டுப்பாட்டு அறையில் இணைய நெறிமுறைகள் அடிப்படையிலான கண்காணிப்பு முறையையும் திரு குமார் தொடங்கிவைத்தார். பொலிவுறு நகரத் திட்டத்தின் ஒரு பகுதியாக நெய்வேலி நகரின் பாதுகாப்பு மற்றும் பந்தோபஸ்த்தை நோக்கமாகக்கொண்டு இது அமைக்கப்பட்டுள்ளது. ரூ. 13.40 கோடி செலவிலான இந்தத் திட்டத்தின் கீழ் முக்கியமான மற்றும் பாதிப்புக்குள்ளாகும் இடங்களில் 322 புல்லட் கேமராக்களும் 14 தானியங்கி நம்பர் ப்ளேட் கேமராக்களும் பொருத்தப்பட்டுள்ளன.
******
SMB/GK
(Release ID: 1885938)
Visitor Counter : 193