குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் துறை அமைச்சகம்

காதி நிறுவனத்தின் விற்பனை நிலையங்களை புதுப்பிப்பதன் மூலம் காதித்துறையை மறுசீரமைப்பு செய்வதை காதி சீர்திருத்தம் மற்றும் வளர்ச்சித் திட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளது

Posted On: 22 DEC 2022 1:07PM by PIB Chennai

நூற்பாளர்கள் மற்றும் நெசவாளர்களின் வேலைவாய்ப்பு மற்றும் வருவாயை அதிகரிக்க, காதி நிறுவனத்தின்  விற்பனை நிலையங்களை  புதுப்பிப்பதன் மூலம் காதித்துறையை மறுசீரமைப்பு செய்வதை, காதி சீர்திருத்தம் மற்றும் வளர்ச்சித் திட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளது.

காதி சீர்திருத்தம் மற்றும் வளர்ச்சித் திட்டத்தின் கீழ், விற்பனை நிலையங்களை புதுப்பிப்பது, காதிப் பொருட்களின் விற்பனையை அதிகரிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

கடந்த 2019-20ஆம்ஆண்டில் ரூ.4,211.26 கோடிக்கும், 2020-21ஆம் ஆண்டில் ரூ.3,527.71 கோடிக்கும், 2021-22ஆம் ஆண்டில் ரூ.5,051.72 கோடிக்கும்  காதிப் பொருட்கள் விற்பனையானது. கொவிட்-19 பெருந்தொற்றுக் காரணமாக 2020-21ஆம் ஆண்டு விற்பனை குறைந்தது.

இத்திட்டம் தொடங்கப்பட்டதிலிருந்து 2009-10 ஆம் ஆண்டில் ரூ.2,966.55 லட்சம் செலவில் 358 விற்பனை நிலயங்கள் புதுப்பிக்கப்பட்டன. 2021-22-ஆம் ஆண்டில் 47 விற்பனை நிலையங்கள் புதுப்பிக்கப்பட்டன. சென்னையில்,  ரூ.393.47 லட்சம் செலவில், 26 காதி விற்பனை நிலையங்கள் புதுப்பிக்கப்பட்டுள்ளன. மதுரையில் ரூ.133.01 லட்சம் 11 விற்பனை நிலையங்கள் புதுப்பிக்கப்பட்டன.

இத்தகவலை, மக்களவையில் இன்று மத்திய சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்துறை இணை அமைச்சர் திரு பானுபிரதாப் சிங் வர்மா, எழுத்துபூர்வமாகத் தெரிவித்தார்.

**************

AP/IR/KPG/GK



(Release ID: 1885722) Visitor Counter : 117


Read this release in: English , Urdu , Marathi , Gujarati