மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பம்

சமூக நலனுக்காக, தனிநபர் சாரா தரவுகளின் தரம் மிக முக்கியம்: செயற்கை நுண்ணறிவுத் துறை நிபுணர்கள் வலியுறுத்தல்

Posted On: 22 DEC 2022 9:12AM by PIB Chennai

செயற்கை நுண்ணறிவிற்காக தரமானத் தரவுகளைப் பெறுவதற்கான அணுகுமுறை மற்றும் அவற்றின் முக்கியத்துவம் குறித்து விவாதிப்பதற்காக பல்வேறு வல்லுநர்களுடனான கலந்துரையாடலுக்கு மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் கீழ் இயங்கும் தேசிய மின்னணு ஆளுகை பிரிவு அண்மையில் ஏற்பாடு செய்திருந்தது.

அரசு அதிகாரிகள், செயற்கை நுண்ணறிவு ஆர்வலர்கள், இளைஞர்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்ட இந்த அமர்விற்கு தேசிய மின்னணு ஆளுகை பிரிவின் தலைவர் திரு அபிஷேக் சிங் தலைமை தாங்கினார். தேசிய தரவு ஆளுகைத் திட்ட கொள்கை உட்பட தரமான தரவுகளை அணுகுவதற்காக இந்திய அரசு மேற்கொண்டு வரும் முக்கிய முன்முயற்சிகள் பற்றியும், செயற்கை நுண்ணறிவிற்காக தரவுகளை சேகரிப்பதன் முக்கியத்துவம் பற்றியும் அவர் பேசினார்.

தற்போதைய திறந்த நிலை தரவு சூழலியல், தரமான தரவுகளை வழங்குவதில் இருக்கும் சவால்கள், புதிய கண்டுபிடிப்புகளுக்காக தரவுகளைப் பொறுப்போடு பயன்படுத்துவதில் சம்பந்தப்பட்டவர்களின் பங்கு, இத்துறையில் இந்தியாவின் எதிர்காலம் போன்ற விஷயங்கள் குறித்து நிபுணர்கள் விவாதித்தார்கள்.

**************

 

AP/RB/GK



(Release ID: 1885644) Visitor Counter : 112