தொலைதொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம்
azadi ka amrit mahotsav

குக்கிராமங்களில் மொபைல் கோபுரங்கள் அமைத்தல்

இடுகை இடப்பட்ட நாள்: 21 DEC 2022 2:46PM by PIB Chennai

தொலைதொடர்புச் சேவை அளிப்போர், தொலைத்தொடர்புத் துறை மற்றும் மாநில அரசுகளிடம் இருந்து பெறப்பட்ட தரவின்படி மார்ச் 2022 வரை, நாட்டில் உள்ள 6,44,131 கிராமங்களில் 6,05,230 கிராமங்களில் மொபைல் பயன்படுத்தும் வசதி உள்ளது.  38,901 கிராமங்களில் மொபைல் கோபுரங்கள் இல்லை.  தொலைத்தொடர்பு வசதி இல்லாத இடங்களில் அதனை படிப்படியாக அளிக்கும் பணிகளில் அரசும் தொலைத்தொடர்பு சேவை வழங்குவோரும் ஈடுபட்டுள்ளனர்.

  • ரூ 26,316 கோடி திட்டத்தில் நாட்டில் மொபைல் வசதி இல்லாத கிராமங்களில் 4 ஜி சேவை அளித்தல்
  • இடதுசாரி தீவிரவாத்தால் பாதிக்கப்பட்டப் பகுதிகளில் 2-ம் கட்டமாக ரூபாய் 2211 கோடி செலவில் 4 ஜி மொபைல் சேவை வழங்குதல்
  • இடதுசாரி தீவிரவாதத்தால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் முதல்கட்டமாக 2 ஜி சேவையிலிருந்து 4 ஜி மொபைல் தொழில்நுட்ப வசதியுடன் மேம்படுத்துதல்

இத்தகவலை மக்களவையில் மத்திய தொலைதொடர்புத் துறை இணை அமைச்சர் திரு தேவுசிங் சவுகான் எழுத்துப்பூர்வமாக தெரிவித்தார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும். https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1885359

**************

AP/IR/RJ/KRS


(வெளியீட்டு அடையாள எண்: 1885479) வருகையாளர் எண்ணிக்கை : 179
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , Telugu