மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பம்

கணினி அடிப்படையிலான இணையவழி அணுகுதல் தரவு தீர்வுக்கான புதிய கண்டுபிடிப்புப் போட்டியின் பாராட்டு விழாவிற்கு தேசிய தகவல் மையம் ஏற்பாடு செய்திருந்தது

Posted On: 21 DEC 2022 11:55AM by PIB Chennai

டிஜிட்டல் இந்தியா முன்முயற்சியின் கீழ் கணினி அடிப்படையிலான இணையவழி அணுகுதல் தரவு  தீர்வினை உருவாக்கிய  புதிய கண்டுபிடிப்புப்   போட்டியின்  பாராட்டு விழாவிற்கு தேசிய தகவல் மையம், மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம்  ஏற்பாடு செய்திருந்தது.

இந்நிகழ்ச்சியில், மாற்றுத்திறனாளிகளுக்கு  அதிகாரமளிக்கும் துறையின் செயலாளர் திரு  ராஜேஷ் அகர்வால், மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் செயலாளர் திரு அல்கேஷ் குமார் ஷர்மா, மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் கூடுதல் செயலாளர்  திரு அமித் அகர்வால்,  என்ஐசி தலைமை  இயக்குனர்  திரு ராஜேஷ் கெரா,  மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சக இணைச் செயலாளர் திரு  சுஷில் பால், என்ஐசி துணைத் தலைமை  இயக்குனர்  திருமதி. அல்கா மிஸ்ரா, மூத்த அரசு அதிகாரிகள், வழிகாட்டிகள், மதிப்புமிகு நடுவர்குழு உறுப்பினர்கள், புத்தொழில் நிறுவனங்களின் பிரதிநிதிகள்  கலந்துகொண்டனர். 

எலக்ட்ரானிக்ஸ் மற்றும் ஐடி அமைச்சகத்தின் செயலாளர் திரு  அல்கேஷ் குமார் சர்மா பேசுகையில், புத்தொழில்களின் இளம் அணிகளால் வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தும்  இதுபோன்ற முயற்சிகள் எதிர்வரும் சவால்களைச் சமாளிக்க உதவும் என்றார்.

பங்கேற்பாளர்கள் அனைவரயும் பாராட்டிய மாற்றுத்திறனாளிகளுக்கு  அதிகாரமளிக்கும் துறையின் செயலாளர் திரு  ராஜேஷ் அகர்வால், இத்தகைய முயற்சிகள் மாற்றுத்திறனாளிகளுக்கு உள்நாட்டிலேயே டிஜிட்டல் கருவிகளையும் தீர்வுகளையும் உருவாக்க உதவும் என்றார். இந்த சவால்கள், பரந்த மற்றும் வளர்ந்து வரும் சந்தைக்குப் பயன் தருவதோடு,  உள்நாட்டில் வளர்க்கப்படும் அறிவுசார் சொத்து  மூலம் உலகளாவிய தாக்கத்தை உருவாக்க இந்தியாவுக்கு உதவும் என்று அவர் கூறினார்.

ஒரு சிறந்த தேர்வுக் குழு, போட்டியின்  பல கட்டங்களுக்குப் பின் , அவர்களின் புதுமையான யோசனைகளின் அடிப்படையில் ஐந்து புத்தொழில்களைப்  பட்டியலிட்டது, பின்னர்  முதுநிலை நடுவர் குழு  இறுதியாக வெற்றியாளரைத் தேர்ந்தெடுத்தது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1885306

**************

AP/SMB/GK(Release ID: 1885436) Visitor Counter : 115


Read this release in: English , Urdu , Hindi , Telugu