ஆயுஷ்
azadi ka amrit mahotsav

பாரம்பரிய மருத்துவ அறிவியல் குறித்த ஆய்வு

Posted On: 20 DEC 2022 4:03PM by PIB Chennai

புதுதில்லியில் உள்ள மத்திய ஆயுர்வேத அறிவியல் ஆராய்ச்சிக் கவுன்சில், ஆயுஷ் முறைகளின் பழங்கால கையெழுத்துப் பிரதிகள் மற்றும் நூல்களை சேகரித்தல், புத்துயிரூட்டுதல் மற்றும் மீட்டெடுக்கும் பணியை செய்கிறது. ஹைதராபாதில் உள்ள இந்திய மருத்துவப் பாரம்பரியத்தின் தேசிய நிறுவனம்  மருத்துவ-வரலாற்று நூலகத்தைப் பராமரிக்கிறது. 

இந்த நூலகத்தில் மருத்துவ வரலாற்றின் பல்வேறு அம்சங்கள் மற்றும் பிரிவுகள் பற்றிய சுமார் 10384 நூல்கள்  (இவற்றில் 448 அரிய நூல்கள்) உள்ளன. ஆயுஷ் முறைகள் மற்றும் ஐரோப்பிய மருத்துவத்தின் பல பாரம்பரிய நூல்கள் சேகரிப்பில் உள்ளன.  சில முதல் பதிப்புகளும் இவற்றில் அடங்கும்.

இந்த நூலகத்தில் 285 கையெழுத்துப் பிரதிகள் (பனை ஓலை/காகிதம்) உள்ளன, இவற்றில் 173 ஆயுர்வேதம் பற்றியவை; 106  யுனானி மருத்துவ முறை மற்றும் 06 சித்த மருத்துவ முறை பற்றியவை.

இதேபோல், சித்தா ஆராய்ச்சிக்கான மத்திய கவுன்சில் (சிசிஆர்எஸ்) தமிழ் உரைநடையில் உள்ள பழங்கால சித்த இலக்கியங்களைப்  புரிந்துகொண்டு அவற்றைத்  தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் மொழிபெயர்த்துள்ளது.

ஆயுஷ் அமைச்சர் திரு  சர்பானந்த சோனாவால் இன்று மாநிலங்களவையில் எழுத்துபூர்வமாக அளித்த பதிலில் இந்தத்  தகவலைத் தெரிவித்தார்.

 

**************

 

SM/SMB/KRS


(Release ID: 1885206)
Read this release in: Kannada , English , Urdu , Telugu