நுகர்வோர் நலன், உணவு மற்றும் பொது விநியோகம் அமைச்சகம்

நுகர்வோர் உபகாரத்துறையின் இந்த ஆண்டுக்கான செயல்பாடுகள் குறித்த கண்ணோட்டம்

Posted On: 20 DEC 2022 2:38PM by PIB Chennai

நுகர்வோர் பாதுகாப்புச் சட்டத்தை  மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுப்பது, விலைவாசியைக் கண்காணிப்பது ஆகியவை நுகர்வோர் விவகாரம், உணவு மற்றும் பொது விவகார அமைச்சகத்தின் கீழ் இயங்கும் நுகர்வோர் விவகாரத்துறையின் செயல்பாடுகளாகும்.

2022-ஆம் ஆண்டின் இத்துறை படைத்த சாதனைகள் மற்றும் முக்கிய முன்முயற்சிகள் வருமாறு:

விலைக் கண்காணிப்பு முறையை வலுப்படுத்தும் திட்டம்:

அரிசி, கோதுமை, ஆட்டா, கடலைப்பருப்பு, துவரம்பருப்பு, உளுத்தம்பருப்பு, பாசிப்பருப்பு, மசூர் பருப்பு, சர்க்கரை, வெல்லம், கடலை எண்ணெய், கடுகு, எண்ணெய், வனஸ்பதி, சூரியகாந்தி எண்ணெய், சோயா எண்ணெய், பனை எண்ணெய், தேயிலை, பால், உருளைக்கிழங்கு வெங்காயம், தக்காளி, உப்பு  ஆகிய 22  அத்தியாவசியப் பொருட்களின் மொத்த விலை  மற்றும் சில்லறை விலை கண்காணிக்கப்பட்டு வருகிறது. நாடு முழுவதும் உள்ள 179 சந்தை மையங்களிலிருந்து திரட்டப்படும் தரவுகளின் அடிப்படையில், கண்காணிப்பு மேற்கொள்ளப்படுகிறது.  இந்த ஆண்டில் இத்தகைய 57 புதிய மையங்கள்  சேர்க்கப்பட்டுள்ளன. கடந்த ஆண்டு வரை 122 மையங்கள் செயல்பட்டு வந்தன.

விலைவாசிக் கட்டுப்பாட்டு முறையை வலுப்படுத்த இந்த ஆண்டில் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு ரூ.1,47,01,908 வழங்கப்பட்டுள்ளது.

விலையை நிலை நிறுத்தும் நிதி

தோட்டத் தொழில் பொருட்களின் குறிப்பாக வெங்காயம், உருளைக் கிழங்கு, பருப்பு வகைகள் ஆகியவற்றின் விலை ஏற்ற இறக்கத்திற்கு உட்பட்டதாகும். அறுவடைக் காலத்தில் ஒரு விலையும், பின்னர் வேறு விலையும் விற்கப்படுவது வழக்கமாக நடைபெறும் ஒன்றாகும். இதனால் நுகர்வோர் பெரும் பாதிப்புக்கு உள்ளாவது வழக்கம்.

இதனைத் தடுக்க  கொள்முதல் மற்றும் விநியோகச் செலவைக் கட்டுப்படுத்துவதற்கான புதிய திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இதற்காக,  விலை நிர்ணயம் நிறுத்தம் நிதி உருவாக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் பருப்பு வகைகள், வெங்காயம் ஆகியவை பெருமளவுக்கு இருப்பு வைக்கப்பட்டு பின்னர் அவை மாநிலங்களுக்கு வழங்கப்படுகின்றன.

நுகர்வோர் விழிப்புணர்வு

நுகர்வோர் விவகாரத்துறை, நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வை வலுப்படுத்தி வருகிறது. இந்த முன்முயற்சி மூலம், நுகர்வோரிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவது இதன் நோக்கமாகும். 

இந்திய தர நிர்ணய அமைவனம்

இந்திர தர நிர்ணய அமைவனச் சட்டம் 2016, 2017ஆம் ஆண்டு அக்டோபர் 12-ம் தேதி முதல், செயல்பாட்டுக்கு வந்துள்ளது.  இதன் நிர்வாக கவுன்சில் மாற்றியமைக்கப்பட்டு 4-வது கூட்டம் அதன் தலைமை அலுவலகத்தில் ஆகஸ்ட் மாதம் 24-ம் தேதி நடைபெற்றது.

புதிய முன்முயற்சிகள்

நுகர்வோர் விவகாரத்துறை பல்வேறு முன்முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. இந்த ஆண்டு ஏப்ரல் முதல் நவம்பர்  மாதம் வரை 1,217 தரநிலைகள் வகுக்கப்பட்டுள்ளன, 3,426 தரநிலைகள் ஆய்வு செய்யப்பட்டுள்ளன.

தரக்கட்டுப்பாடு அதிகாரிகளுக்கான திறன் மேம்பாடு:

தரக்கட்டுப்பாட்டு அதிகாரிகளுக்கான சான்றிதழ்கள் வழங்கப்படுகின்றன. நாடு முழுவதும், ஆண்டு முழுவதும்  ஆய்வகங்களில் 15 சான்றிதழ் வகுப்புகள் நடைபெறுகின்றன. மேலும், ஆராய்ச்சி மற்றும் பயிற்சி சேவைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. சர்வதேச பயிற்சித் திட்டங்களும், நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன.

தகவல் தொழில்நுட்பச் சேவைகள், தரநிர்ணய வலைதளம், ஆய்வுகளின் தரம் போன்ற புதிய அம்சங்கள் சேர்க்கப்பட்டுள்ளன.

நுகர்வோர் விவகாரம் மற்றும் மக்கள் தொடர்பு

2022 ஏப்ரல் முதல் நவம்பர் மாதம் வரை நுகர்வோருக்கான 315 தரமேம்பாட்டுத் திட்டங்கள் மண்டல அலுவலகங்கள் மற்றும் கிளை அலுவலகங்களால் நாடு முழுவதும் ஏற்பாடு செய்யப்பட்டன.

இந்த காலகட்டத்தில், நகை செய்வோர் மற்றும் கைவினைஞர்களுக்கான விழிப்புணர்வுத் திட்டங்கள் மற்றும் 325 தர மேம்பாட்டு நடவடிக்கைகள் நடத்தப்பட்டன.

இதே கால கட்டத்தில் கல்லூரிகள் மற்றும் தொழில்நுட்ப நிறுவனங்களில் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கான 1,212 நடவடிக்கைகளை தரநிர்ணய அமைவனம் ஏற்பாடு செய்தது. மேலும், 328 தர மேம்பாட்டு நடவடிக்கைகளை அரசுடன் இணைந்து அமைவனம் நடத்தியுள்ளது.

தர நிலைக்கான மாநில அளவிலான குழுக்கள்

இந்திய தரப்பயன்பாட்டை கருத்தில் கொண்டு 26 மாநிலங்களில், இந்தக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. நவம்பர் 25ம் தேதி வரை நாடு முழுவதும் 3,852 தர மன்றங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.

தரச்சான்றிதழ்கள் தொடர்பாக  இந்த ஆண்டில் 1,000 புகார்கள் பெறப்பட்டுள்ளன. இதில் 385 புகார்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது. 25.11.2022 வரை 315 புகார்கள் மீது விசாரணை நடைபெற்று வருகிறது. 135 குறைபாடுகளில் 127-க்கு தீர்வு காணப்பட்டுள்ளன.

சட்டவிரோத தர முத்திரைகளைப் பயன்படுத்துவதை தடுக்கும் வகையில் அமலாக்க நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றளன. இந்த ஆண்டில் 109 சோதனை மற்றும் பறிமுதல்  நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

நுகர்வோர் பாதுகாப்பு

உலக நுகர்வோர் உரிமைகள் தினம் 15.03.2022  அன்று புதுதில்லி விஞ்ஞான்பவனில் கொண்டாடப்பட்டது. நுகர்வோர் விவகாரத்துறை அமைச்சர் திரு பியூஷ் கோயல் தலைமையில் இணை அமைச்சர்கள், அஸ்வினி குமார் சவ்பே, சாத்வி நிரஞ்சன் ஜோதி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

நுகர்வோர் ஆணையங்கள் குறித்த தேசிய பயிலரங்கு 20.06.2022 அன்று நடைபெற்றது.  

நவம்பர் 12-ம் தேதி நடைபெற்ற தேசிய லோக் அதாலத் மூலம், 5,930 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டன.

மேலும் கூடுதல் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1885059

------

AP/PKV/KPG/KRS



(Release ID: 1885172) Visitor Counter : 238