உணவுப் பதப்படுத்துதல் தொழிற்சாலைகள் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

உணவு சாகுபடிக்குப் பிந்தைய இழப்பு

Posted On: 20 DEC 2022 2:02PM by PIB Chennai

மதிப்புக் கூட்டுப்பொருட்களை உருவாக்குதல், சாகுபடிக்குப் பிந்தைய இழப்புகளைக் குறைத்தல் உள்ளிட்டவற்றின் மூலம்  உணவுப்பதப்படுத்தும் துறையின் ஒட்டுமொத்த மேம்பாட்டிற்காக, சாகுபடிக்குப் பிந்தைய உள்கட்டமைப்பு மற்றும் பதப்படுத்தும் வசதிகளை ஏற்படுத்த வேண்டும் என்பதை மத்திய உணவுப்பதப்படுத்தும் தொழில்துறை அமைச்சகம் கட்டாயமாக்கியுள்ளது. வேளாண் அத்தியாவசியப்பொருட்களின் சாகுபடிக்குப் பிந்தைய இழப்பு குறித்து அறிந்து கொள்வதற்காக இந்த அமைச்சகத்தின் சார்பில் இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கவுன்சில் – சாகுபடிக்குப் பிந்தைய பொறியியல் தொழில்நுட்ப நிறுவனம் (ஐசிஏஆர்-சிஐபிஎச்இடி) உதவியுடன் ஒரு ஆய்வும், நபார்டு ஆலோசனை சேவை நிறுவனத்தின் உதவியுடன் மற்றொரு ஆய்வு நடத்தப்பட்டன. இதில் 2022-ம் ஆண்டில் தானியங்களுக்கான சாகுபடிக்குப் பிந்தைய இழப்பு 3.89-5.92 சதவீதமாகவும், பருப்பு வகைகளின் இழப்பு 5.65-6.74 சதவீதமாகவும், எண்ணெய் வித்துக்களின் இழப்பு 2.87-7.51 சதவீதமாகவும், பழங்களின் இழப்பு 6.02-15.05 சதவீதமாகவும், காய்கறிகளின் இழப்பு 4.87-11.61 சதவீதமாகவும் இருக்கக்கூடும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது.

மக்களவையில் இன்று எழுப்பப்பட்ட கேள்விக்கு மத்திய உணவுப் பதப்படுத்தும் துறை இணையமைச்சர் பிரஹலாத் சிங் பட்டேல் அளித்துள்ள எழுத்துப்பூர்வமான பதிலில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

 **************

AP/ES/AG/KRS


(Release ID: 1885094) Visitor Counter : 218


Read this release in: English , Urdu , Telugu