உள்நாட்டு விமானப் போக்குவரத்து அமைச்சகம்

25 விமான நிலையங்களை 2022 முதல் 2025-ஆம் ஆண்டு வரை குத்தகைக்கு விட்டு இந்திய விமான நிலைய ஆணையம் நடவடிக்கை

Posted On: 19 DEC 2022 2:30PM by PIB Chennai

வாரணாசி, அமிர்தசரஸ், ஜோத்பூர், ராஞ்சி, சூரத், வதோதரா, போபால், ஹூப்ளி, இம்ப்பால், பாட்னா, திருச்சி. கோவை, மதுரை, சென்னை, திருப்பதி, விஜயவாடா உட்பட  நாடு முழுவதும் உள்ள விமான நிலையங்களை 2022 முதல் 2025-ஆம் ஆண்டு வரை, இந்திய விமான நிலைய ஆணையம் குத்தகைக்கு விட்டுள்ளது.  இதே போல்  பின்வரும் 8 விமான நிலையங்களில் ஒப்பந்த அடிப்படையில் பொது - தனியார் பங்களிப்புடன் (பிபிபி) மேம்பாட்டு மற்றும் நிர்வாகப் பணிகளை மேற்கொள்ளவும் குத்தகை ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது.

  1. இந்திரா காந்தி சர்வதேச  விமான நிலையம் (டிஐஏஎல்)
  2. சத்ரபதி சிவாஜி மகராஜ் சர்வதேச விமான நிலையம் மும்பை (எம்ஐஏஎல்)
  3. சவுத்ரி சரண் சிங் சர்வதேச விமான நிலையம், லக்னோ (எல்ஐஏஎல்)
  4. சர்தார் வல்லபாய் படேல் சர்வதேச விமான நிலையம், அகமதாபாத் (ஏஐஏஎல்)
  5. மங்களூரு சர்வதேச விமான நிலையம், (எம்ஏஐஏஎல்)
  6. ஜோத்பூர் சர்வதேச விமான நிலையம், (ஜேஐஏஎல்)
  7. லோக்ப்ரியா கோபிநாத் போடோலோய் சர்வதேச விமான நிலையம், குவஹாத்தி (ஜிஐஏஎல்)
  8. திருவனந்தபுரம் சர்வதேச விமான நிலையம் குவஹாத்தி (டிஐஏஎல்)

விமான நிலையங்களின் மேலாண்மை மற்றும்  பராமரிப்புப் பணிகளில் தனியார் பங்களிப்பை ஊக்குவிப்பதன் மூலம் பயணிகளுக்கு சிறப்பான சேவையை வழங்க மத்திய அரசு முன்வந்துள்ளது.  விமான நிலையங்களை குத்தகைக்கு விடுவதன் மூலம் ஈட்டும் வருவாயை, நாடு முழுவதும் உள்ள விமான நிலையங்களில் உள்கட்டமைப்பு மற்றும் மேம்பாட்டுப் பணிகளுக்கு பயன்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

மாநிலங்களவையில் இன்று எழுப்பப்பட்ட கேள்விக்கு விமானப் போக்குவரத்துத்துறை இணை  அமைச்சர் திரு வி கே சிங் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1884776

**************

AP/ES/KPG/KRS

 



(Release ID: 1884887) Visitor Counter : 184


Read this release in: English , Urdu , Odia , Telugu