உள்நாட்டு விமானப் போக்குவரத்து அமைச்சகம்
புதிய விமான நிலையங்கள் உருவாக்கம் மற்றும் தரம் உயர்த்துதல்
Posted On:
19 DEC 2022 2:31PM by PIB Chennai
நாடு முழுவதும் 21 பசுமை விமான நிலையங்கள் அமைக்க மத்திய அரசு சார்பில் கொள்கை அடிப்படையில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே 9 பசுமை விமான நிலையங்கள் இயக்கப்பட்டு வரும் நிலையில், 10-வது பசுமை விமான நிலையம் கோவா மாநிலத்தில் 11.12.2022 அன்று திறந்து வைக்கப்பட்டது. கடந்த 2018-ஆம் ஆண்டு முதல் 7 பசுமை விமான நிலையங்கள் குறிப்பாக சிக்கிம் மாநிலத்தின் பக்யாங்க், கேரளாவின் கண்ணூர், கர்நாடகாவின் கல்புர்கி, மகாராஷ்ட்ராவின் சிந்து துர்க், உத்தரப்பிரதேசத்தின் குஷி நகர், ஆந்திரப்பிரதேசத்தின் ஒர்வகல் மற்றும் அருணாசலப்பிரதேசத்தின் டோன்யி- போலோ விமான நிலையங்கள் ஆகிய பசுமை விமான நிலையங்கள் இயக்கப்பட்டு வருகிறது.
இந்திய விமான நிலைய ஆணையம், விமான நிலையங்களை தரம் உயர்த்தும் பணிகளை தேவைப்படும் காலங்களில் மேற்கொண்டு வருகிறது. போக்குவரத்துத் தேவை, நிலம், வணிக ரீதியிலான பயன்பாடு உள்ளிட்ட அம்சங்களின் அடிப்படையில் இந்தப் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. கொரோனா பெருந்தொற்றுக்கு முந்தைய காலமான 2018-19-ஆம் ஆண்டில், அதற்கு முந்தைய ஆண்டான 2017-18-ஆம் நிதியாண்டுடன் ஒப்பிடும் போது விமானப் பயணிகளின் எண்ணிக்கை 11.6 சதவீதம் அதிகரித்துள்ளது. கொரோனா காலத்தில் குறைந்த போதிலும், அதன் பிறகு 2021-22-ஆம் ஆண்டில் அதற்கு முந்தைய 2020-21-ஐக் காட்டிலும் 63.7 சதவீதம் அதிகரித்துள்ளது.
மாநிலங்களவையில் இன்று எழுப்பப்பட்ட கேள்விக்கு விமானப் போக்குவரத்துத்துறை இணை அமைச்சர் திரு வி கே சிங் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1884778
**************
AP/ES/KPG/KRS
(Release ID: 1884885)
Visitor Counter : 220