உள்நாட்டு விமானப் போக்குவரத்து அமைச்சகம்
மத்திய சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகத்தின் 2022-ஆம் ஆண்டுக்கான செயல்பாடுகள் குறித்த முன்னோட்டம்
Posted On:
16 DEC 2022 5:57PM by PIB Chennai
பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசின் கீழ் 2022-ஆம் ஆண்டில் மத்திய சிவில் விமானப் போக்குவரத்து துறை அமைச்சகம் பல்வேறு சீர்திருத்தங்களை செய்துள்ளது. மத்திய விமானப் போக்குவரத்து அமைச்சகத்தின் முன்னோடித் திட்டமான வட்டார இணைப்புத்திட்டம், 2ம் மற்றும் 3ம் அடுக்கு நகரங்களில் விமானத்துறையின் உள்கட்டமைப்பு மற்றும் இணைப்பு தொடர்பான வசதிகளை பொதுமக்கள் அடையவேண்டும் என்ற நோக்கத்திற்காக உருவாக்கப்பட்டதாகும்.
2022ம் ஆண்டில் 50 புதிய வட்டார வழித்தடங்களில் சேவை தொடங்கப்பட்டது. இந்த திட்டத்தின் கீழ் புதிதாக 140 வட்டார வழித்தடங்களில் சேவைகளை தொடங்குவதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது. ‘ஆப்ரேஷன் கங்கா’ மீட்பு நடவடிக்கையின் உக்ரைன் நாட்டில் இருந்து 90 விமானங்களில் 22,500க்கும் மேற்பட்ட இந்தியர்கள் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர்.
சர்வதேச விமான நிலைய கவுன்சிலிற்கு 2022 ஆண்டு முதல் 2025-ம் ஆண்டு வரை மீண்டும் இந்தியா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. கடந்த பத்தாண்டுகளில் அதிக எண்ணிக்கையிலான வணிக பைலட் உரிமங்களை 2022 இல் விமான போக்குவரத்துறை தலைமை இயக்குனர் வழங்கியுள்ளார். ஏர் இந்தியாவின் ராஜ்ய உறவு ரீதியிலான நடவடிக்கைகளின் கீழ் முதலீடு தொடர்பான திட்டங்கள் நிறைவு செய்யப்பட்டுள்ளது.
விமான நிலையங்களில் பயணிகளுக்கு சிரமமின்றி சேவையை வழங்குவதற்கு முக அடையாளத் தொழில்நுட்பத்தை பயன்படுத்தும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பயணிகள் தங்களது பயணச்சீட்டையும், அடையாள அட்டையையும் பல்வேறு இடங்களில் பரிசோதனை செய்யவேண்டிய அவசியமில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ட்ரோன் சட்டத்திருத்த நடவடிக்கைகள் 2022, ட்ரோன் பயிற்சி சான்றிதழ் திட்டம், ட்ரோன் இறக்குமதி கொள்கைத் திட்டம் போன்றவைகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
விவசாயிகளுக்கு உதவும் நோக்கில் சர்வதேச மற்றும் நாடு தழுவிய விமான வழித்தடங்கள் திட்டத்தின் கீழ், 5 புதிய விமான நிலையங்கள் இணைக்கப்பட்டுள்ளது. மொத்தத்தில் 58 விமான நிலையங்கள் உள்ளன.
கொவிட்-19 பெருந்தொற்றுக்குப் பிறகு வெளிநாடுகளில் உள்ள இந்திய குடிமக்களை நம்நாட்டிற்கு கொண்டு வருவதற்காக ‘வந்தே பாரத் திட்டம்’ கொண்டுவரப்பட்டது. இந்தத் திட்டத்தின் கீழ் 37 வெளிநாடுகளில் இருந்து இந்திய குடிமக்கள் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர். இந்த ஆண்டு மார்ச் 27ம் தேதி சர்வதேச வர்த்தக பயணிகள் போக்குவரத்து சேவை மீண்டும் தொடங்கப்பட்டது.
தற்போது இந்தியா 116 வெளிநாடுகளுடன் விமானச் சேவைகள் தொடர்பான உடன்படிக்கை செய்துள்ளது. 40 வெளிநாடுகளுக்கு இந்தியாவிலிருந்து நேரடி விமானப் போக்குவரத்து சேவை தொடங்கப்பட்டுள்ளது. மேலும் 100க்கும் அதிகமான வெளிநாடுகளுக்கு இந்தியாவிலிருந்து இணைப்பு விமானப் போக்குவரத்து சேவை தொடங்கப்பட்டுள்ளது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1884212
============
AP/GS/RS/KRS
(Release ID: 1884875)
Visitor Counter : 196