பணியாளர் நலன், பொதுமக்கள் குறை தீர்ப்பு மற்றும் ஓய்வூதியங்கள் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

எல்லா நாட்களிலும் 24 மணி நேரமும் அனைத்து வகையான சேவைகளையும் வழங்கும் வசதிக்காக எந்த முயற்சியையும் தமது அரசு விட்டுவைக்காது என்று அருணாச்சலப் பிரதேச முதலமைச்சர் திரு பேமா கண்டு தெரிவித்துள்ளார்

Posted On: 19 DEC 2022 9:01AM by PIB Chennai

எல்லா நாட்களிலும் 24 மணி நேரமும் அனைத்து வகையான சேவைகளையும் வழங்கும் வசதிக்காக எந்த முயற்சியையும் தமது அரசு விட்டுவைக்காது என்று அருணாச்சலப்  பிரதேச முதலமைச்சர் திரு பேமா கண்டு தெரிவித்துள்ளார்.

நல்லாட்சி வாரம் 2022க்கான தமது செய்தியில் இதனைத் தெரிவித்துள்ள முதலமைச்சர்,  “கிராமங்களுக்கான நிர்வாகம்" என்ற  5 நாள் பிரச்சாரத்தை மத்திய பணியாளர் நலன், பொதுமக்கள் குறைதீர்ப்பு, ஓய்வூதியங்கள் துறை இணை அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் இன்று புதுதில்லியில் உள்ள விஞ்ஞான் பவனில் தொடங்கி வைக்கிறார் என்றும்  இந்த நாள் நமது தொலைநோக்குப் பார்வைகொண்ட முன்னாள் பிரதமர், பாரத ரத்னா, திரு  அடல் பிஹாரி வாஜ்பாயின் பிறந்தநாளை நினைவுகூர்கிறது என்றும் கூறினார்.

'குறைந்தபட்ச அரசு - அதிகபட்ச நிர்வாகம்' என்ற மந்திரத்தை செயபடுத்தத் தமது அரசு உறுதிபூண்டுள்ளதாகவும், செயல்திறன், திறன் ஆகிய இரண்டையும் கொண்டு வருவதற்காக இயக்க  முறையில் நிர்வாக சீர்திருத்தங்களை மேற்கொண்டுள்ளதாகவும் முதலமைச்சர் திட்டவட்டமாகத் தெரிவித்தார். மக்கள் எளிதாக வாழ்வதற்கு வசதியாக இ-நிர்வாகத் துறையின் 22 திட்டங்கள் இதில் அடங்கும் என்று அவர் கூறினார்.

2022, டிசம்பர் 23 அன்று மாவட்ட அளவிலான பயிலரங்குகளில் கலந்துரையாடுவதற்காக 373 சிறந்த நல்லாட்சி நடைமுறைகள் கண்டறியப்பட்டதாக நிர்வாக சீர்தித்தங்கள் மற்றும் பொதுமக்கள் குறைதீர்ப்புத் துறை  செயலாளர் திரு வி.ஸ்ரீனிவாஸ் தெரிவித்தார்.2022 டிசம்பர் 19 முதல் 25 வரையிலான நல்லாட்சி வாரம்-2022 ல் பொதுமக்கள் குறைதீர்ப்பின் 43 வெற்றிக் கதைகளும் பகிரப்படும் என்று அவர் கூறினார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1884667

******

AP/SMB/KRS


(Release ID: 1884750)