பாதுகாப்பு அமைச்சகம்
உள்நாட்டிலேயேத் தயாரிக்கப்பட்ட ஏவுகணை அழிப்பானான ஐஎன்ஸ் மொர்முகோவ், பி15பி கிளாஸ் 2வது போர்க்கப்பல் மத்திய பாதுகாப்பு அமைச்சர் முன்னிலையில் கடற்படையில் இணைந்தது
Posted On:
18 DEC 2022 2:16PM by PIB Chennai
மும்பைக் கடற்படைத்தளத்தில் 2022 டிசம்பர் 18ம் தேதி நடைபெற்ற நிகழ்ச்சியில், ஐஎன்எஸ் மொர்முகோவ் என்ற ஏவுகனைகளைத் தாக்கி அழிக்கும் வல்லமை கொண்டப் போர்க்கப்பல், மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத்சிங் முன்னிலையில், இந்தியக் கடற்படையில் இணைந்தது. இதன்மூலம் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட இந்தியக் கடற்படையில் சேர்க்கப்பட்டுள்ள 2-வது விசாகப்பட்டினம் கிளாஸ் டெஸ்ட்ராயர் இது என்ற பெருமையை, அந்தக் கப்பல் பெற்றுள்ளது. பி15பி ஏவுகணை அழிப்பானைக் கொண்ட இந்தப் போர்க்கப்பல், கடற்படையின் போர்க்கப்பல் உற்பத்தி அமைப்பு மற்றும் மஸாகான் டாக் கப்பல் தயாரிப்பு நிறுவனத்துடன் இணைந்து வடிவமைக்கப்பட்டுள்ளது.
விழாவில் பேசிய மத்திய அமைச்சர், ஐஎன்எஸ் மொர்முகோவ் இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட அதிக சக்திவாய்ந்த போர்க்கப்பல் என்றும், இந்தக் கப்பல், இந்தியக் கடற்படையின் கடல்சார் திறன்களை மேம்படுத்துவதுடன், கடல்பாதுகாப்பை உறுதிசெய்யும் எனவும் தெரிவித்தார். ஐஎஸ்எஸ் மொர்முகோவ் , தொழில்நுட்ப ரீதியிலான அதிநவீன ஏவுகணைகளைத் தாங்கிச் செல்லும், வல்லமை கொண்டது என்றார். இதில் இடம்பெற்றுள்ள 75 சதவீதத்திற்கும் மேற்பட்ட உபகரணங்கள் உள்நாட்டில் வடிவமைக்கப்பட்டவை என்பது, இந்திய ராணுவம் தற்சார்பு அடைவதற்கான முனைப்பில் இருப்பதற்கு உதாரணம் என்று கூறிய திரு. ராஜ்நாத் சிங், இந்த போர்க்கப்பல், இந்தியாவின் தற்போதைய மற்றும் எதிகாலத் தோவையையும், நட்பு நாடுகளின் தேவையையும் பூர்த்தி செய்யும் என்று குறிப்பிட்டார்.
இந்த அதிநவீனப் போர்க்கப்பல் உருவாக்கத்தில் அர்ப்பணிப்புடன் ஈடுபட்ட பொறியாளர்கள், தொழில்நுட்பவியலாளர்களுக்கு பாராட்டு தெரிவித்த அவர், இந்தியக் கடற்படை, கடற்சார் பாதுகாப்பைக் கண்காணிப்பது மட்டுமல்லாமல், சமூக–பொருளாதார வளர்ச்சியிலும் பங்காற்றுவதாகப் பெருமிதம் தெரிவித்தார்.
இந்திய கடல் பிராந்தியத்தைப் பாதுகாப்பதே, இந்தியக் கடற்படையின் முக்கிய இலக்கு என்றுக் குறிப்பிட்ட அவர், பொருளாதார வளர்ச்சி என்பது கடல் மார்க்கமாக அதிகரிக்கும் வர்த்தகத்தைச் சார்ந்தே இருப்பதாகவும் தெரிவித்தார்.
எல்லைப்பகுதிகளையும், கடலோரப் ப குதிகளையும் பாதுகாக்கும் ஆயுதப்படையினர், தங்களுடைய அர்ப்பணிப்புடன் கூடியப் பங்களிப்பின்மூலம், இந்தியாவின் மாபெரும் வளர்ச்சிக்கு முதுகெலும்பாகத் திகழ்வதாக அமைச்சர் கூறினார். நாள்தோறும் புதிய உயரத்தை எட்டி வருவதால், இந்தியா தற்போது, உலகின் சக்திவாய்ந்த 5-வது பொருளாதார நாடாக உருவெடுத்துள்ளதாகவும் பெருமிதம் தெரிவித்தார்.
சர்வதேச அளவிலான மாறிவரும் சவால்களை எதிர்கொள்ள நாடு தயாராக இருப்பதாகவும், ராணுவத்தில் பெரும்பாலும் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட ஆயுதங்கள் மற்றும் உபகரணங்களைக் கொண்ட உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தவும் மத்திய அரசு முன்னுரிமை அளிப்பதாகவும் அவர் கூறினார்.
நாடுகளுக்கு இடையேயான பொருளாதார, அரசியல் மற்றும் வர்த்தக உறவுகள் நாளுக்கு நாள் மேம்படுவதாகவும், ஒவ்வொரு நாடும், மற்ற நாடுகளை வர்த்தக ரீதியில் சார்ந்திருப்பது தவிர்க்க இயலாதது என்றும் குறிப்பிட்டார். உலகின் பொருளாதார வளர்ச்சி மற்றும் நிலைத்தன்மையைவிட, விதி அடிப்படையிலான சுதந்திரமும், கடல்வழிப் பாதுகாப்பே முக்கியம் என்று அமைச்சர் தெரிவித்தார்.
ராணுவ உபகரணங்களுக்கான தேவை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், பொது மற்றும் தனியார் நிறுவனங்களை சர்வதே தரம் கொண்ட நிறுவனங்களாக மாற்ற ஏதுவான கொள்கைகளை மத்திய அரசு அறிமுகப்படுத்தியிருப்பதை பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் சுட்டிக்காட்டினார்.
**************
SM/ES/DL
(Release ID: 1884591)
Visitor Counter : 197