பெட்ரோலியம் மற்றம் இயற்கை எரிவாயு அமைச்சகம்
மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி 7வது பெட்ரோ கெமிக்கல் மாநாட்டில் பங்கேற்பு
Posted On:
17 DEC 2022 6:58PM by PIB Chennai
புது தில்லியில் நடைபெற்ற 7வது பெட்ரோ கெமிக்கல் மாநாட்டில், மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு, வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் துறை அமைச்சர் திரு. ஹர்தீப் சிங் பூரி, இன்று பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு துறை இணை அமைச்சர் திரு. ராமேஸ்வர் தெலி முன்னிலையில் நிறைவுரையாற்றினார்.
பல்வேறு பெட்ரோ கெமிக்கல் பங்குதாரர்களுக்கு இந்தத் துறையில் உள்ள வாய்ப்புகள் மற்றும் சவால்கள் குறித்து விவாதிப்பதற்கான விரிவான தளத்தை வழங்குவதை இந்த மாநாடு நோக்கமாகக் கொண்டுள்ளது.
மாநாட்டில் உரையாற்றிய மத்திய அமைச்சர் திரு ஹர்தீப் சிங் பூரி, "இந்தியாவில் தற்போது பெட்ரோ கெமிக்கல் சந்தை அளவு 190 பில்லியன் அமெரிக்க டாலர் என்னும் அளவாக உள்ளது. அதேசமயம் வளர்ந்த பொருளாதாரங்களுடன் ஒப்பிடும்போது பெட்ரோ கெமிக்கல் பிரிவுகளின் தனிநபர் நுகர்வு மிகவும் குறைவாக உள்ளது. இந்த இடைவெளி, தேவை, வளர்ச்சி மற்றும் முதலீட்டு வாய்ப்புகளுக்கு கணிசமான இடத்தை வழங்குகிறது. மேக் இன் இந்தியா மற்றும் மேக் ஃபார் தி வேர்ல்ட் ஆகிய பிரதமரின் முயற்சியை பெட்ரோ கெமிக்கல்ஸ் துறை ஆதரிக்கிறது. பெட்ரோ கெமிக்கல் துறையின் வளர்ச்சியை உந்தும் மிக முக்கியமான காரணிகளில் ஒன்று அதிகரித்து வரும் மக்கள்தொகை மற்றும் பெட்ரோ கெமிக்கல் பொருட்களின் தேவை அதிகரித்து வருகிறது. வேகமாக விரிவடையும் பொருளாதாரம், உலகளாவிய பெட்ரோ கெமிக்கல் தேவையின் அதிகரிக்கும் வளர்ச்சிக்கு இந்தியா 10% பங்களிக்க முடியும். இந்தத் துறையை மேம்படுத்தவும், இந்தியாவை உலகளாவிய உற்பத்தி மையமாக மாற்றவும் இது வழிவகுக்கக்கூடும் என கூறினார்.
**********
AP/PKV/DL
(Release ID: 1884475)
Visitor Counter : 207