அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை
azadi ka amrit mahotsav

அறிவியல் மற்றும் தொழில் ஆராய்ச்சிக் கவுன்சிலின் "ஒரு வாரம், ஒரு ஆய்வகம்" என்னும் நாடு தழுவிய பிரச்சாரம் ஜனவரி 6 முதல் தொடங்கும்- மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங்

Posted On: 17 DEC 2022 5:01PM by PIB Chennai

அறிவியல் மற்றும் தொழில் ஆராய்ச்சி கவுன்சிலின் (சிஎஸ்ஐஆர்) "ஒரு வாரம், ஒரு ஆய்வகம்" என்னும் நாடு தழுவிய பிரச்சாரம் ஜனவரி 6 முதல் தொடங்கவுள்ளதாக மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை அமைச்சர்  டாக்டர் ஜிதேந்திர சிங் அறிவித்துள்ளார்.  கவுன்சிலின் துணைத் தலைவராகவும் உள்ள அவர் ,புதுதில்லியில் உள்ள அறிவியல் மையத்தில் கவுன்சிலின் 200வது ஆட்சிமன்றக்  குழுக் கூட்டத்தில் உரையாற்றினார்.  “ஒரு வாரம் ஒரு ஆய்வகம்” என்ற கருப்பொருள் அடிப்படையிலான பிரச்சாரம் இளம் கண்டுபிடிப்பாளர்கள், மாணவர்கள், ஸ்டார்ட்-அப்கள், கல்வியாளர்கள் ஆகியோரின் உற்சாகப்படுத்தும்  என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சிக் கவுன்சிலின் (சிஎஸ்ஐஆர்) தலைவரான பிரதமர் நரேந்திர மோடி, அக்டோபர் 15, 2022 அன்று சிஎஸ்ஐஆர் சொசைட்டியின் கூட்டத்திற்குத் தலைமை தாங்கினார் என்றும், கடந்த 80 ஆண்டுகளில் சிஎஸ்ஐஆர் மேற்கொண்ட முயற்சிகளைப் பாராட்டினார் என்றும் டாக்டர் ஜிதேந்திர சிங் நினைவு கூர்ந்தார்.

சிஎஸ்ஐஆர் 100 ஆண்டுகள் நிறைவடையும் போது 2042 ஆம் ஆண்டிற்கான தொலைநோக்குப் பார்வையை உருவாக்குமாறு சொசைட்டி கூட்டத்தில் பிரதமர் வலியுறுத்தினார், மேலும் கடந்த 80 ஆண்டுகளின் பயணத்தை ஆவணப்படுத்துவதன் முக்கியத்துவத்தையும் எடுத்துரைத்தார்.

ஏப்ரல் 01, 2023 முதல் அனைத்து ஆய்வகங்களிலும் காகிதமில்லா மின்-அலுவலகத்தை செயல்படுத்துவதற்கும், 2022-2023 ஆம் ஆண்டிற்கான நிர்வாகப் பணியாளர்களுக்கான மின்-செயல்திறன் மதிப்பீட்டு முறைக்கும் இந்தக்கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.

**********

AP/PKV/DL


(Release ID: 1884443) Visitor Counter : 215