சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்
                
                
                
                
                
                    
                    
                        ஐதராபாத்தில் உயிரி மருத்துவ  ஆராய்ச்சிக்கான தேசிய விலங்கு வள மையத்தை  மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியா திறந்து வைத்தார்
                    
                    
                        
                    
                
                
                    Posted On:
                17 DEC 2022 3:30PM by PIB Chennai
                
                
                
                
                
                
                ஐதராபாத்தில் உள்ள ஜீனோம் பள்ளத்தாக்கில் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் உயிரி மருத்துவ  ஆராய்ச்சிக்கான தேசிய விலங்கு வள மையத்தை  மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியா இன்று திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் தெலங்கானா தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சர் திரு சி. மல்லா ரெட்டி கலந்து கொண்டார். 
நிகழ்ச்சியில் பேசிய டாக்டர் மாண்டவியா,"எந்தவொரு சமூகமும் முன்னேற, ஆராய்ச்சி மற்றும் கண்டுபிடிப்பு ஒரு முக்கியமான அம்சமாக இருக்கும். இந்தியா உள்நாட்டு ஆராய்ச்சிக்கு உத்வேகத்தை அளித்துள்ளது. இது இப்போது நமக்கு பலன்களை அறுவடை செய்கிறது. இந்த மையம் 21 ஆம் நூற்றாண்டில் உயிரி மருத்துவ ஆராய்ச்சியில் இந்தியாவை ஒரு முக்கிய உலகளாவிய முன்னணி நாடாக  மாற்றும் ஆற்றலைக் கொண்டுள்ளது. , விலங்கு பராமரிப்பு மற்றும் பயன்பாட்டிற்கான உயர்ந்த சர்வதேச தரத்தை கடைபிடிப்பதன் மூலமும், உயிரியல் மருத்துவ ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக்கு ஆதரவாக தரமான சேவைகளை வழங்குவதன் மூலமும், இந்த வள வசதி நாட்டின்  ஆரோக்கியம் மற்றும் நலனை மேம்படுத்துவதில் முக்கிய பங்கை வகிக்க முடியும்" என்று தெரிவித்தார்.
பெருந்தொற்றுப் பரவலின் போது,  பிரதமர் உள்நாட்டு தடுப்பூசிகளை தயாரிப்பதில் வலியுறுத்தினார். தடுப்பூசிகள் பற்றாக்குறையால் உலகம் தவித்தபோது, இந்தியா இந்த சவாலை ஏற்றுக்கொண்டது. நமது விஞ்ஞான சமூகம் அந்த தடுப்பூசிகளை உருவாக்கி தங்கள் திறமையை நிரூபித்தது. வெளிநாட்டு தடுப்பூசிகளின் இறக்குமதிக்கு 5-10 ஆண்டுகள் ஆகும் போது, இந்தியாவின் அறிவியல் சமூகம் இந்த தடுப்பூசிகளை ஒரு வருட காலத்திற்குள் தயாரித்தது என்று அவர் கூறினார்.
ஆராய்ச்சி நிறுவனங்கள், தொழில்நுட்பம் அல்லது மருந்து நிறுவனங்கள் என ஆக்கப்பூர்வமான துறைகளில் இந்தியர்கள் முன்னணியில் உள்ளனர் என்று டாக்டர் மாண்டவியா கூறினார். உலகின் மருந்தகத்தில் இந்தியாவின் முக்கியப் பங்கை அவர்  சுட்டிக்காட்டினார்.   “உலகில் தயாரிக்கப்படும் நான்கு மாத்திரைகளில்  ஒன்று இந்தியாவில் தயாரிக்கப்படுகிறது. எனவே, இப்போது இந்தியாவை மருந்து உற்பத்திக்கு மட்டுமல்ல, மருந்து ஆராய்ச்சிக்கும் மையமாக மாற்ற விரும்புகிறோம். இதற்கு  தேவைப்படும் மருத்துவ பரிசோதனைகளுக்கான வலுவான செயல்முறைகளை நாம் உருவாக்க வேண்டும். எனவே, இந்தப் பார்வையை உண்மையானதாக மாற்றுவதில் இந்த மையம்  முக்கியப் பங்கு வகிக்கும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
************** 
AP/PKV/DL
                
                
                
                
                
                (Release ID: 1884429)
                Visitor Counter : 220