கப்பல் போக்குவரத்து அமைச்சகம்
azadi ka amrit mahotsav

துறைமுகங்களை நவீனப்படுத்துதல்

இடுகை இடப்பட்ட நாள்: 16 DEC 2022 3:39PM by PIB Chennai

தமிழ்நாட்டில் சாகர் மாலா திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்படும், ரூ.356 கோடி மதிப்பிலான 5 திட்டங்களுக்கு மத்திய அரசு சார்பில் ரூ.147 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

நாடு முழுவதும், சாகர் மாலா திட்டத்தின் கீழ் 5.4 லட்சம் கோடி மதிப்பில் 800-க்கும் மேற்பட்ட திட்டங்களுக்கு மத்திய அரசு சார்பில் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தில் தற்போது செயல்பாட்டில் உள்ள துறை முகங்களை நவீனப்படுத்துதல், புதிய துறைமுகங்களை அமைத்தல், துறைமுக இணைப்புகளை உருவாக்குதல், உள்நாட்டு நீர்வழிகள், கலங்கரை விளக்கம் சுற்றுலா உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படும்.

இதில், துறைமுகங்களை நவீனப்படுத்துதல் பிரிவின் கீழ் 2.5 லட்சம் கோடி மதிப்பிலான 241 திட்டங்கள் செயல்படுத்தும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. குறிப்பாக 20 துறைமுகங்களை நவீனப்படுத்தும் பணிகளுக்கு அமைச்சகத்தின் சார்பில் மொத்தத் திட்ட மதிப்பில் பாதி நிதி வழங்கப்படுகிறது.  இதில் ரூ.157 கோடி மதிப்பிலான நான்கு திட்டங்கள் முடிக்கப்பட்டிருப்பதுடன் ரூ.868  கோடி மதிப்பிலான 11 திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் சாகர் மாலா திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்படும், ரூ.356 கோடி மதிப்பிலான 5 திட்டங்களுக்கு மத்திய அரசு சார்பில் ரூ.147 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

 

மக்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு மத்திய துறைமுகம், கப்பல் மற்றும் நீர்வழித்துறை அமைச்சர் திரு சர்பானந்ததா சோனோவால் எழுத்துபூர்வமாக அளித்துள்ள பதிலில் தெரிவித்துள்ளார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1884107

**************

SG/ES/KPG/KRS


(வெளியீட்டு அடையாள எண்: 1884243) வருகையாளர் எண்ணிக்கை : 135
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , Telugu