சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம்
பாரத்மாலா சாலைத் திட்டம்
Posted On:
15 DEC 2022 2:39PM by PIB Chennai
பாரத்மாலா சாலைத் திட்டத்தின் முதல் கட்டத்தில் 24,800 கி.மீ. தூரத்திற்கு பல்வேறு வகையான சாலைகள் மற்றும் சுமார் 10,000 கி.மீ. மீதமுள்ள தேசிய சாலைகள் மேம்பாட்டுத் திட்டங்களுக்கு ரூ. 5.35 லட்சம் கோடி அனுமதிக்கப்பட்டுள்ளது. இதில் 23,500 கி.மீ. தூர சாலைகளுக்கு ஒப்பந்தங்கள் அளிக்கப்பட்டுள்ளன. 11,400 கி.மீ. தூர சாலைப்பணிகள் முடிந்துள்ளன. எஞ்சியுள்ள திட்டங்களுக்கு நிதியாண்டு 2024-25 க்குள் ஒப்பந்தங்கள் அளிக்க இலக்கு நிரனயிக்கப்பட்டுள்ளது.
பாரத்மாலா சாலைத் திட்டத்தின் முதல் கட்டத்தில் பொருளாதார வழித்தடங்கள் மற்றும் கடலோர, துறைமுகத் தொடர்பு சாலைகளுக்கான திட்ட விவரம்:
பொருளாதார வழித்தடங்களின் மொத்த தூரம் 12,002 கி.மீ. ; ஒப்பந்தம் அளிக்கப்பட்ட தூரம் 7,029 கி.மீ. ; பணி முடிக்கப்பட்ட தூரம் 3,019 கி.மீ.
கடலோர, துறைமுகத் தொடர்பு சாலைகளின் மொத்த தூரம் 1,079 கி.மீ. ; ஒப்பந்தம் அளிக்கப்பட்ட தூரம் 269 கி.மீ. பணி முடிக்கப்பட்ட தூரம் 90 கி.மீ.
இந்தத் தகவலை மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் திரு நிதின் கட்கரி இன்று மக்களவையில் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் தெரிவித்தார்.
****
AP/SMB/KPG
(Release ID: 1883855)
Visitor Counter : 238