சிறுபான்மையினர் நலன் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

பிரதமரின் திறன் மூலம் பணிவாய்ப்புத் திட்டம் தற்போது பிரதமரின் பாரம்பரிய கலைத்திறன் மேம்பாட்டுத்திட்டமாக பெயரிடப்பட்டுள்ளது

Posted On: 15 DEC 2022 2:20PM by PIB Chennai

பிரதமரின் திறன் மூலம் பணிவாய்ப்புத் திட்டம் தற்போது பிரதமரின் பாரம்பரிய கலைத்திறன் மேம்பாட்டுத்திட்டமாகப் பெயரிடப்பட்டுள்ளதாக மத்திய சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் திருமதி ஸ்மிருதி சுபின் இரானி மக்களவையில் இன்று எழுத்துப்பூர்வமாக தெரிவித்தார். கற்றுக்கொள்ளுங்கள்- பொருள் ஈட்டுங்கள், பாரம்பரிய கலைகளில் திறன் மேம்பாடு மற்றும் பயிற்சி, சிறுபான்மையினரின் பாரம்பரிய கலைகளை பாதுகாத்தல், புதிய விடியல், புதிய இலக்கு ஆகிய 5 திட்டங்கள் இதில் இடம் பெற்றுள்ளன.  இத்திட்டத்திற்கு 15-வது ஊதியக்குழு காலகட்டத்தின் போது அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.

பிரதமரின் பாரம்பரிய கலைத்திறன் மேம்பாட்டுத்திட்டம் என்பது கலைத்தொழிலில் ஈடுபட்டுள்ள சிறுபான்மையினர் உட்பட  அனைத்து சிறுபான்மையினரின் வாழ்வாதாரத்தை  மேம்படுத்தும் நோக்கில் உருவாக்கப்பட்டுள்ளது.

**************

AP/IR/AG/KPG


(Release ID: 1883819) Visitor Counter : 251


Read this release in: English , Urdu , Telugu , Malayalam