உள்நாட்டு விமானப் போக்குவரத்து அமைச்சகம்
azadi ka amrit mahotsav

கடந்த 7 வருடங்களில் மேலும் 6 விமான நிலையங்கள் கட்டப்பட்டு, சர்வதேச விமான நிலையங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன

Posted On: 15 DEC 2022 2:32PM by PIB Chennai

நாட்டில் 2014-ம் ஆண்டிற்கு முன்பு 24 சர்வதேச விமான நிலையங்கள் இருந்தன. கடந்த 7 வருடங்களில் மேலும் 6 விமான நிலையங்கள் கட்டப்பட்டு, சர்வதேச விமான நிலையங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன.

கடந்த 7 வருடங்களில் கேரளாவில் கண்ணூர், மகாராஷ்டிராவில் ஷீரடி, உத்தரப்பிரதேசத்தில் குஷி நகர், கோவாவில் மோபா ஆகிய 4 பசுமை விமான நிலையங்கள், சர்வதேச விமான நிலையங்களாக கட்டப்பட்டுள்ளன. மேலும் ஆந்திராவில் தற்போதுள்ள திருப்பதி மற்றும் விஜயவாடா விமான நிலையங்கள் கடந்த 2017-ம் ஆண்டு சர்வதேச விமான நிலையங்களாக அறிவிக்கப்பட்டன.

இத்தகவலை மக்களவையில் விமானப் போக்குவரத்துத்துறை இணையமைச்சர் ஓய்வு பெற்ற ஜெனரல் வி கே சிங் எழுத்துப்பூர்வமாக இன்று தெரிவித்தார்.

**************

AP/IR/AG/KPG


(Release ID: 1883806) Visitor Counter : 138


Read this release in: English , Urdu , Marathi , Telugu