சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சகம்
பாலியல் வன்கொடுமை சம்பவத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு போக்சோ சட்டத்தின் மூலம் விரைவில் நீதி கிடைக்கும் வகையில் மத்திய அரசின் நிதியுதவித் திட்டத்தின் வாயிலாக 1023 விரைவு சிறப்பு நீதிமன்றங்களை நீதித்துறை நடத்தி வருகிறது
Posted On:
15 DEC 2022 2:24PM by PIB Chennai
பாலியல் வன்கொடுமை சம்பவத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு போக்சோ சட்டத்தின் மூலம் விரைவில் நீதி கிடைக்கும் வகையில் மத்திய அரசின் நிதியுதவித் திட்டத்தின் வாயிலாக 1023 விரைவு சிறப்பு நீதிமன்றங்களை நீதித்துறை நடத்தி வருவதாக மாநிலங்களவையில் கேள்வி ஒன்றுக்கு மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சர் திரு கிரன் ரிஜிஜூ எழுத்துப்பூர்வமாக தெரிவித்தார். 2023-ம் ஆண்டு மார்ச் மாதம் வரை விரைவு சிறப்பு நீதிமன்றங்கள் தொடர்ந்து செயல்படும் என்று அவர் கூறியுள்ளார். அக்டோபர் 31, 2022-ம் ஆண்டு வரை 28 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 733 விரைவு சிறப்பு நீதிமன்றங்கள் செயல்பட்டு வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.
மகளிர், குழந்தைகள், மூத்தக் குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள் தொடர்பான குறிப்பிட்ட சிவில் வழக்குகளை விசாரிக்க 2015-ம் ஆண்டு முதல் 2020-ம் ஆண்டு வரை மொத்தம் 1800 விரைவு நீதிமன்றங்களை அமைக்க 14-வது நிதிக்குழு பரிந்துரைத்ததாக அவர் கூறினார்.
தமிழ்நாட்டில் டிசம்பர் 2019, 2020, 2021 ஆண்டுகளில் முறையே 74,73,74 விரைவு நீதிமன்றங்கள் செயல்பட்டன. 2022-ம் ஆண்டு அக்டோபர் மாதம் வரை 73 விரைவு நீதிமன்றங்கள் செயல்பட்டுள்ளன. இதில் 107590 வழக்குகள் நிலுவையில் இருந்ததாகக் கூறியுள்ளார்.
**************
AP/IR/AG/KPG
(Release ID: 1883800)
Visitor Counter : 189