சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

இளம் தலைமுறைக்கு தரமானக் கல்வியை வழங்குவதில் அரசு உறுதி பூண்டுள்ளது: மத்திய அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியா

Posted On: 15 DEC 2022 1:34PM by PIB Chennai

“அரசின் ஆக்கப்பூர்வமான முயற்சிகளின் காரணமாக கடந்த எட்டு ஆண்டுகளில் எம்.பி.பி.எஸ் இடங்கள் 87%, மேல்நிலை படிப்புகளுக்கான இடங்கள் 105% என்ற வகையில் குறிப்பிடத்தக்க அளவு உயர்ந்திருக்கின்றன”, என்று மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியா கூறியுள்ளார்.

கல்வியில் கணிசமான மாற்றத்தை ஏற்படுத்துவதை நோக்கிய ரசின் உறுதிப்பாட்டை வலியுறுத்தி செய்தியாளர்களிடையே பேசிய அவர் இவ்வாறு தெரிவித்தார். “இளம் தலைமுறையினர் தரமானக் கல்வியை அணுகுவதற்காக 2014 முதல் ஏராளமான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன”,  என்றார் அவர்.

“திரு மோடி தலைமையிலான அரசு ஆட்சிக்கு வந்தது முதல் நமது மாணவர்களுக்கு தரமானக் கல்வியை குறைந்த செலவில் அளிப்பதற்கான முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன”, என்று மத்திய சுகாதார அமைச்சர் தெரிவித்தார். 2014 இல் 387 ஆக இருந்த மருத்துவக் கல்லூரிகளின் எண்ணிக்கை, 2022 இல் 648 ஆக உள்ளது என்றும், அரசு மருத்துவக் கல்லூரிகளின் எண்ணிக்கை 96%மும், தனியார் கல்லூரிகள் 42%மும் அதிகரித்திருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

அரசு மருத்துவக் கல்லூரிகளில் 10000 எம்.பி.பி.எஸ் இடங்களை உருவாக்குவதற்காக 16 மாநிலங்களில் உள்ள 58 கல்லூரிகளில் 3877 இடங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதேபோல மேல்நிலை படிப்புகளுக்கான இடங்களை அதிகரிக்க 21 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களின் 72 மருத்துவக் கல்லூரிகளில் முதல் கட்டமாக 4,058 இடங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது என்று அவர் தெரிவித்தார்.

“தூய்மைத் திட்டத்தின் வாயிலாக மட்டும் பள்ளிகளில் 4.5 லட்சம் கழிவறைகள் கட்டப்பட்டு இருப்பதோடு மாணவிகளின் கல்வி இடைநிற்றல் 17%லிருந்து 13%ஆகக் குறைந்துள்ளது”, என்று அமைச்சர் கூறினார்.

                                              ----

 

 

AP/RB/KPG


(Release ID: 1883794) Visitor Counter : 145