ஜல்சக்தி அமைச்சகம்
azadi ka amrit mahotsav

இயற்கை உலகை சீரமைக்க மேற்கொள்ளப்படும் உலகின் முதன்மையான மறுசீரமைப்புத் திட்டங்களில் கங்கை தூய்மைத் திட்டமும் ஒன்று என ஐநா அங்கீகரித்துள்ளது

Posted On: 15 DEC 2022 12:30PM by PIB Chennai

இயற்கை உலகை சீரமைக்க மேற்கொள்ளப்படும் உலகின் முதன்மையான மறுசீரமைப்புத் திட்டங்களில் இந்தியாவின் புனித  கங்கை தூய்மைத் திட்டமும் ஒன்று என ஐநா அங்கீகரித்துள்ளது. இதற்கான விருதை உலக மறுசீரமைப்புத் தினத்தையொட்டி கனடா நாட்டின் மாண்ட்ரில் நடைபெற்ற பல்லுயிர் தொடர்பான 15-வது பருவநிலை மாநாட்டு நிகழ்ச்சியில் கங்கை தூய்மைத் திட்ட தலைமை இயக்குனர் திரு அசோக்குமார் பெற்றார்.  உலகம் முழுவதும் 70 நாடுகளில் நடைபெற்ற 150-க்கும் மேற்பட்ட முன்னெடுப்புத் திட்டங்களில் கங்கை தூய்மைத் திட்டம் தேர்வு செய்யப்பட்டது. இந்த அங்கீகாரம் மூலம் ஐநா நிதி அல்லது தொழில்நுட்ப நிபுணர்களின் உதவி கங்கை தூய்மைத் திட்டம் உள்ளிட்ட மற்ற தேர்ந்தெடுக்கப்பட்ட திட்டங்களுக்கு கிடைக்கும்.

 இந்நிகழ்ச்சியில் பேசிய கங்கை தூய்மைத் திட்டத்தின் தலைமை இயக்குனர் திரு அசோக்குமார், உலகில் சுற்றுச்சூழலுக்கான மறுசீரமைப்பு நடவடிக்கைகளில் ஈடுபடும் முதன்மையான 10 முன்னெடுப்புகளில் கங்கை தூய்மை திட்டத்தை அங்கீகரித்ததன் மூலம்  ஆறுகளின் சுற்றுச்சூழலை மறுசீரமைப்பு செய்யப்பட வேண்டும் என்ற இந்திய அரசின் கங்கை தூய்மைத் திட்டத்திற்கான தேசிய இயக்கத்தின் ஒருங்கிணைந்த முயற்சிகளுக்கு கிடைத்த அங்கீகாரம் என்று தெரிவித்தார்.

**************

AP/IR/AG/KPG


(Release ID: 1883711) Visitor Counter : 195