தொலைதொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம்

தொலைத் தகவல் தொடர்புத்துறை மற்றும் இந்திய தொலைத்தகவல் தொடர்பு தரங்கள் மேம்பாட்டு சங்கம் ஆகியவற்றுடன் இணைந்து டெலிமேட்டிக்ஸ் மேம்பாட்டுக்கான மையம், இணையதள சாதனங்கள் / எந்திரத்தில் இருந்து எந்திரத்திற்கு என்பது குறித்து உலகளாவிய இரண்டு நாள் கருத்தரங்கை நடத்தியது

Posted On: 15 DEC 2022 9:05AM by PIB Chennai

தொலைத் தகவல் தொடர்புத்துறை மற்றும் இந்திய தொலைத்தகவல் தொடர்பு தரங்கள் மேம்பாட்டு சங்கம்  ஆகியவற்றுடன் இணைந்து டெலிமேட்டிக்ஸ் மேம்பாட்டுக்கான மையம், இணையதள சாதனங்கள் /   எந்திரத்தில் இருந்து எந்திரத்திற்கு என்பது குறித்து உலகளாவிய  இரண்டு நாள் கருத்தரங்கைப் புதுதில்லியில் நேற்று நடத்தியது . தரப்படுத்தப்பட்ட அமலாக்கங்கள் மூலம் இணையதள சாதனங்கள் எந்திரத்தில் இருந்து எந்திரத்திற்கான வளர்ச்சி என்பதை இந்தக் கருத்தரங்கு மையப் பொருளாகக் கொண்டிருந்தது.

இணையதள சாதனங்கள் /   எந்திரத்தில் இருந்து எந்திரத்திற்கான சூழலின் முக்கியப்  பங்குதாரர்களான ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுத் துறை, கல்வித்துறை, அரசு, தொழில்துறை, புத்தொழில்கள், உலகளாவிய தொலைத்தகவல் தொடர்பு சங்கங்கள், தரங்கள் மேம்பாட்டு அமைப்புகள் ஆகியவற்றுக்கிடையே  விரிவான ஒத்துழைப்பைக் கட்டமைப்பதற்கான திட்டத்தை வகுப்பது இந்த மாநாட்டின் நோக்கமாக இருந்தது.  இது பல்வேறுப்பட்ட துறைகளில் இணையதள சாதனங்கள் /   எந்திரத்தில் இருந்து எந்திரம் என்பதன் விரிவான பயன்பாட்டிற்குத் தேவையான புதிய கண்டுபிடிப்பு தரப்படுத்துதல் மற்றும் ஒருங்கிணைந்த செயல்பாட்டுக்கு வகை செய்யும்.

வளர்ந்துவரும் 5 ஜி தொழில்நுட்பப் புரட்சியின் புதிய சகாப்தத்தை உலகம் அனுபவமாகக் கொண்டுள்ளது. இது  புதிய பயன்பாட்டு விஷயங்களுக்கான தன்னியக்கத் தீர்வுகளுக்கு அடிப்படையான  செயற்கை நுண்ணறிவு மற்றும் இணையதள சாதனங்கள்/எந்திரத்தில் இருந்து எந்திரம் என்பதன் வளர்ச்சியைத் துரிதப்படுத்தியுள்ளது.  நாடு முழுவதும் பொலிவுறு நகரங்களைக் கட்டமைக்கும் அரசின் பேரார்வ இயக்கப் பின்னணியில் இந்தக் கருத்தரங்கு மிகுந்த முக்கியத்துவம் பெறுகிறது.

இந்தக் கருத்தரங்கை தொலைத்தகவல் தொடர்புத்துறை செயலாளரும் டிஜிட்டல் தொடர்புகள் ஆணையத்தின் தலைவருமான திரு கே. ராஜாராமன் தொடங்கிவைத்து சிறப்புரையாற்றினார். ஊரக மற்றும் சிறு நகரப் பணிகளின் குறிப்பிட்ட தேவைகளுக்கு அனைத்தையும் உள்ளடக்கிய தொழில்நுட்பத் தரங்களை இணைந்து தீவிரமாக செயல்படுமாறு பங்குதாரர்களையும் புத்தொழில் நிறுவனங்களையும், புதிய கண்டுபிடிப்பாளர்களையும் அவர் தமது உரையில் வலியுறுத்தினார்.

டிஜிட்டல் தொடர்புகள் ஆணையத்தின் உறுப்பினர் (சேவைகள்) டாக்டர் மகேஷ் சுக்லா, இதன்  தொழில்நுட்பப் பிரிவு உறுப்பினர் திரு சஞ்சீவ் அகர்வால், இந்திய தொலைத்தகவல் தொடர்பு தரங்கள் மேம்பாட்டு சங்கத்தின் தலைமை இயக்குனர் திருமதி பமீலா குமார், டெலிமேட்டிக்ஸ் மேம்பாட்டுக்கான மையத்தின் தலைமை நிர்வாக அதிகாரி டாக்டர் ராஜ்குமார் உபாத்யாய் உளிட்டோரும் இந்தக் கருத்தரங்கில் உரையாற்றினர்.

இந்நிகழ்வில் பல புத்தொழில் நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள், தொழில்துறையினர், இணையதள சாதனங்கள் /   எந்திரத்தில் இருந்து எந்திரத்திற்கான தீர்வுகளுக்கு புதிய கண்டுபிடிப்புகளைக் காட்சிப்படுத்தினர். 

                                                 ****

 

AP/SMB/KPG



(Release ID: 1883693) Visitor Counter : 153