பணியாளர் நலன், பொதுமக்கள் குறை தீர்ப்பு மற்றும் ஓய்வூதியங்கள் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

குடிமைப்பணித் தேர்வு மூலம் 2022 முதல் 2030-ம் ஆண்டு வரை ஆண்டுதோறும் நேரடியாக இந்திய ஆட்சிப்பணி அதிகாரிகளை தேர்ந்தெடுக்கப் பரிந்துரை செய்வதற்கு குழு அமைக்கப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திரா தெரிவித்துள்ளார்

Posted On: 14 DEC 2022 1:32PM by PIB Chennai

குடிமைப்பணித் தேர்வு மூலம் 2022 முதல் 2030-ம் ஆண்டு வரை ஆண்டுதோறும் நேரடியாக இந்திய ஆட்சிப்பணி அதிகாரிகளை தேர்ந்தெடுக்கப் பரிந்துரை செய்வதற்கு குழு அமைக்கப்பட்டுள்ளதாக மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், புவி அறிவியல், பிரதமர் அலுவலகம், பணியாளர், பொது மக்கள் குறை தீர்ப்பு,  ஓய்வூதியம், அணுசக்தி மற்றும் விண்வெளித்துறை இணையமைச்சர் அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார்.

 மக்களவையில் இது குறித்த கேள்விக்கு எழுத்துப்பூர்வமாக பதிலளித்த டாக்டர் ஜிதேந்திர சிங், 2020-ம் ஆண்டு முதல் இந்திய குடிமைப்பணித் தேர்வு மூலம்  தேர்ந்தெடுக்கப்படும் இந்திய காவல்பணி அதிகாரிகளின் எண்ணிக்கை 200 ஆகவும், இந்திய வெளியுறவுப்பணி அதிகாரிகளின் எண்ணிக்கை 150- ஆகவும் அதிகரிக்கப்பட்டுள்ளதாக கூறினார்.

2021-ம் ஆண்டு இந்திய குடிமைப்பணித் தேர்வின் மூலம் தேர்ந்தெடுக்கப்படும் இந்திய ஆட்சிப்பணி அதிகாரிகளின் எண்ணிக்கை 180 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் டாக்டர் ஜிதேந்திர சிங் குறிப்பிட்டுள்ளார்.

**************

AP/IR/AG/KPG


(Release ID: 1883414)
Read this release in: English , Urdu , Marathi , Telugu