சுரங்கங்கள் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

சட்ட விரோத சுரங்கத் தொழிலை தடுப்பதற்கான முயற்சிகள்

Posted On: 14 DEC 2022 12:57PM by PIB Chennai

சட்டவிரோத சுரங்கத் தொழிலை தடுப்பதற்கு தேவையான சட்டங்களை இயற்றுவதற்கு மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அதிகாரமளித்துள்ளது. சுரங்கங்கள் மற்றும் கனிமங்கள் (மேம்பாடு மற்றும் ஒழுங்குமுறை) சட்டம் 1957-ல் பிரிவு 23சி இதற்கான விதிமுறைகளை வகுப்பதற்கு மாநில அரசுகளுக்கு அதிகாரம் அளிக்கஉள்ளது. சட்டவிரோத சுரங்கம் தோன்றுதல், கனிமங்களை இருப்பு வைத்து கொண்டு செல்லுதல் ஆகியவற்றிற்கு தடை விதிக்க இந்த சட்டம் வகை செய்கிறது.

சட்டத்தின் 23சி பிரிவுக்கிணங்க, தமிழ்நாடு, ஆந்திரா, பீகார், சத்தீஷ்கர், கோவா, குஜராத், ஹரியானா, இமாச்சலபிரதேசம், ஜம்மு-காஷ்மீர், ஜார்க்கண்ட், கர்நாடகா, கேரளா, மத்தியப்பிரதேசம், மகாராஷ்ட்டிரா, மேகாலயா, நாகாலாந்து, ஒரிசா, பஞ்சாப், ராஜஸ்தான், உத்தரப்பிரதேசம், உத்தராஞ்சல். மேற்கு வங்கம் ஆகிய 22 மாநிலங்களைச்சேர்ந்த அரசுகள் விதிமுறைகளை வகுத்துள்ளன.

மாநிலங்களில் 2019-20ம் ஆண்டு முதல் 2021-22 ம் ஆண்டு வரை பதிவு செய்யப்பட்ட வழக்குகள், மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் பற்றி மாநில வாரியாக பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

மக்களவையில் இன்று எழுத்து மூலம் அளித்த பதிலில், நிலக்கரி மற்றும் சுரங்கங்கள், நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் திரு பிரல்ஹாத் ஜோஷி இதனை தெரிவித்துள்ளார்

**************

AP/PKV/RS/RR


(Release ID: 1883400)
Read this release in: English , Urdu , Telugu , Malayalam