அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை

சிறந்த விஞ்ஞானிகள் மற்றும் நிறுவனங்களுடன் இந்திய விவசாயிகளை இணைக்கும் வகையிலான ஐம்பத்தொரு (51) உயிரி தொழில்நுட்ப வேளாண் மையங்களுக்கு உயிரி தொழில்நுட்ப துறை நிதியளித்துள்ளதாக மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திரா கூறியுள்ளார்

Posted On: 14 DEC 2022 12:30PM by PIB Chennai

உயிரி தொழில்நுட்பத்துறை  நிதி அளித்துள்ள  ஐம்பத்தியொரு (51) உயிரி தொழில்நுட்ப வேளாண் மையங்களில் நாற்பத்து நான்கு (44) மையங்கள்  செயல்பட்டு வருவதாக  மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், புவி அறிவியல், பிரதமர் அலுவலகம், பணியாளர், பொது மக்கள் குறை தீர்ப்பு,  ஓய்வூதியம், அணுசக்தி மற்றும் விண்வெளித்துறை இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங்  கூறியுள்ளார்.

மக்களவையில் கேள்வி நேரத்தின் போது பதிலளித்த டாக்டர் ஜிதேந்திர சிங், விவசாயிகளை மையமாகக் கொண்டு உயிரி தொழில்நுட்ப வேளாண் புத்தாக்க  அறிவியல் செயலி கட்டமைப்பை உயிரி தொழில்நுட்பத்துறை அமல்படுத்தி வருவதாக  தெரிவித்தார். இது சிறந்த விஞ்ஞானிகள் மற்றும் நிறுவனங்களுடன் விவசாயிகளை இணைக்கிறது என்று கூறினார்.

சிறந்த வேளாண் உற்பத்தியை சிறிய மற்றும் நடுத்தர விவசாயிகள் பெரும் வகையில் இத்திட்டம் செயல்படுத்தப்படுவதாக தெரிவித்தார்.  இதன் மூலம் 4 லட்சத்திற்கும் மேற்பட்ட விவசாயிகளின் வேளாண் உற்பத்தி திறன் மற்றும் வருவாய் அதிகரித்துள்ளதாகவும் கூறினார்.  உயிரி தொழில்நுட்பத்துறை மூலம் ஊரகப் பகுதிகளில்  200 தொழில்முனைவோர்களும் உருவாகியுள்ளதாக டாக்டர் ஜிதேந்திர சிங் குறிப்பிட்டுள்ளார்.

 

**************

AP/IR/AG/KPG



(Release ID: 1883393) Visitor Counter : 100