சுற்றுலா அமைச்சகம்
சுதேசி (ஸ்வதேஷ்) தர்ஷன் திட்டத்தின் கீழ், புதுச்சேரியில் நிறைவேற்றப்பட்ட 4 திட்டங்களை மத்திய சுற்றுலாத்துறை அமைச்சர் திரு கிஷன் ரெட்டி நாட்டுக்கு அர்ப்பணித்தார்
Posted On:
13 DEC 2022 4:50PM by PIB Chennai
அர்ப்பணிக்கப்பட்ட முக்கியத் திட்டங்கள்:-
திருக்காஞ்சியில் உள்ள புனித கங்கை வராகு நதீஷ்வர் கோயிலில் ரூ.5.82 கோடி செலவில் யாத்ரிகர்களுக்கான சிறப்பு வசதிகள், ரூ. 1.33 கோடி மதிப்பில் ஆதி மண்டபம் புனரமைப்பு மற்றும் பாரதி பூங்காவில் ஒளிரூட்டும் வசதிகள், காரைக்கால், திருநள்ளாறு கோவிலில் ரூ.7.40 கோடி மதிப்பில் ஆன்மீகப் பூங்காவிற்கான மேம்பாட்டு வசதிகள் மற்றும் சின்ன வீராம்பட்டிணத்தில் ரூ.3.51 கோடி மதிப்பில் ஈடன் கடற்கரையின் மேம்பாட்டு பணிகள்:
மத்திய சுற்றுலா, கலாச்சாரம் மற்றும் வடகிழக்கு மேம்பாட்டுத் துறை அமைச்சர் திரு ஜி கிஷன் ரெட்டி 2022 டிசம்பர் 13ம் தேதி தமது புதுச்சேரி பயணத்தின் போது, சுற்றுலா சார்ந்த பல்வேறு திட்டங்களை நாட்டுக்கு அர்ப்பணித்தார். சுதேசி (ஸ்வதேஷ்) தர்ஷன் திட்டத்தின் கீழ் மத்திய சுற்றுலா அமைச்சகம் இந்தத் திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.
ரூ. 133 கோடி மதிப்பில் ஆதிமண்டபம் புனரமைப்பு மற்றும் பாரதி பூங்காவில் ஒளிரூட்டும் வசதி, திருக்காஞ்சியில் உள்ள புனித கங்கை வராகு நதீஷ்வர் கோயிலில் ரூ.5.82 கோடி செலவில் யாத்ரீகர்களுக்கான சிறப்பு வசதிகள், திருநள்ளாறு கோவிலில் ரூ.7.40 கோடி மதிப்பில் ஆன்மீகப் பூங்காவிற்கான மேம்பாட்டுப் பணிகள் மற்றும் சின்னவீராம்பட்டிணத்தில் ரூ.3.51 கோடி மதிப்பில் ஈடன் கடற்கரையின் மேம்பாட்டு பணிகள் ஆகிய திட்டங்களை தொடங்கி வைத்தார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள தமது ட்விட்டர் பதிவில் புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்திரராஜன், முதலமைச்சர் என். ரங்கசாமி ஆகியோருடன் 4 புதிய திட்டங்களை தொடங்கி வைத்தேன்.
- நீலக் கொடி கடற்கரை
- திருக்காஞ்சி கோவிலை அழகுப்படுத்தும் விளக்குகளுடன் கூடிய பக்தர்களுக்கான சிறப்பு வசதிகள்.
புதுச்சேரி ஷாப்பிங் திருவிழா 2022-யையும் மத்திய அமைச்சர் தொடங்கி வைத்தார். புதுச்சேரி வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு ஷாப்பிங் குறித்த தனித்துவமான அனுபவத்தை வழங்கி வணிகச் சுற்றுலா மற்றும் வர்த்தகத்தை முன்னிறுத்துவதே இந்த திருவிழாவின் சின்னமாக வடிமைக்கப்பட்டுள்ளது. சுற்றுலாத்துறை அதிகாரிகள் முன்னிலையில் உரையாற்றிய அமைச்சர், உலக நாடுகளின் சுற்றுலாப்பயணிகளை கவரும் இந்தியாவின் முக்கிய சுற்றுலாத்தலமாக புதுச்சேரி மாறிவருவதாக பெருமிதம் தெரிவித்தார். அத்தகையை புதுச்சேரியில் ஸ்வதேஷ் தர்ஷன் திட்டத்தின் கீழ் ஒப்புதல் அளிக்கப்பட்ட 4 திட்டங்களை நாட்டுக்கு அர்ப்பணிப்பதில் பெரும் மகிழ்ச்சி அடைகிறேன் என்றார். ஆன்மீக, கலாச்சார. பாரம்பரிய பன்முகத்தன்மை ஆகியவை ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலாக இந்தியா தன்னை அடையாளப்படுத்தி வருவதாகக் குறிப்பிட்ட அமைச்சர், கடந்த 8 ஆண்டுகளில் உலகத்தரம் வாய்ந்த வசதிகள், சிறப்பான உள்கட்டமைப்பு வசதிகள், வாழ்க்கையை எளிதானதாக மாற்றும் டிஜிட்டல் மயமாக்கல் தொழில்நுட்பம் ஆகியவை கடந்த 8 ஆண்டுகளாக இந்தியாவின் அடையாளமாக மாறி வருவதாக தெரிவித்தார். சுற்றுலாவிற்கான நாடாக இல்லாமல், வாழ்க்கையை அனுபவிப்பதற்கான தலமாக இந்தியா மாறியிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
சுதேசி (ஸ்வதேஷ்) தர்ஷன் திட்டத்தின் கீழ் புதுச்சேரியில் ரூ.148.31 கோடி மதிப்பிலான 3 திட்டங்களுக்கு மத்திய சுற்றுலா அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது.
திட்டத்தின் பெயர்
|
நிதி ஒதக்கீடு
|
புதுச்சேரியின் திருக்காஞ்சி-காரைக்கால்-ஏனாம்-பகுதிகளில் ஆன்மீகச் சுற்றுலா மேம்பாடு
|
ரூ.34.96 கோடி
|
காரைக்கால், மாஹி, ஏனாமில் உள்ள ஃப்ரான்கோ தமிழ் கிராம மேம்பாடு
|
ரூ.54.91 கோடி
|
துப்ராயப்பேட்டை, அரிக்கமேடு, வீராம்பட்டிணம், காலாபேட்டை, புதுச்சேரி மேம்பாடு
|
ரூ.58.44 கோடி
|
பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையின் கீழ் சுற்றுலாத்துறைக்கு அதிக ஆதரவும், வழிகாட்டுதலும் வழங்கப்பட்டதாக அமைச்சர் குறிப்பிட்டார். ஜி20 தலைமைத்துவத்தை இந்தியா ஏற்றிருப்பதன் மூலம், விருந்தாளிகளை இறைவனாக பாவிக்க வேண்டும் என்ற இந்தியாவின் தத்துவத்தை ஜி20 நாடுகளின் சுற்றுலாப் பயணிகளுக்கு அறிமுகப்படுத்த வாய்ப்பு கிடைத்திருப்பதாக கூறினார். இதற்கு ஏதுவாக, புதுச்சேரியில் சுற்றுலாத் துறையை மேம்படுத்து மத்திய சுற்றுலா அமைச்சகம் முனைப்பான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
4 திட்டங்கள் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டிருப்பதன் மூலம் புதுச்சேரி மற்றும் காரைக்கால் இரண்டாம் கட்ட ஸ்வதேஷ் தர்ஷன் திட்டத்தின் கீழ், மேம்பாட்டுப் பணிகளை மேற்கொள்ள தேர்வு செய்யப்பட்டுள்ளது என்றும் பிரஷாத் திட்டத்தின் கீழ் இங்குள்ள ஆன்மீகத் தலங்கள் மேம்படுத்த உள்ளதாகவும் கூறினார்.
விருந்தோமல் துறையின் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் தேவைக்கேற்ப வேலைவாய்ப்புகளை உருவாக்க புதுச்சேரி அரசு முன்வரவேண்டும் என வலியுறுத்துவதுடன், புதுச்சேரியை இந்தியாவின் விருப்பமான சுற்றுலாத் தலமாக மாற்ற மத்திய அரசு இணைந்து பணியாற்றும் எனவும் அமைச்சர் திரு ஜி கிஷன்ரெட்டி தெரிவித்துள்ளார்.
**************
AP/ES/RS/IDS
(Release ID: 1883098)
Visitor Counter : 240