குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் துறை அமைச்சகம்
குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறையில் அந்நிய நேரடி முதலீடு
प्रविष्टि तिथि:
12 DEC 2022 1:29PM by PIB Chennai
அந்நிய நேரடி முதலீடு என்பது செயல்படுத்தும் கொள்கையாகும். முதலீட்டு நிறுவனங்களின் அளவுத் தகுதியைப் பொருட்படுத்தாமல் ஒரே சீராக இருப்பது. வெளிநாட்டு நேரடி முதலீட்டை ஊக்குவிக்க முதலீட்டாளர்களுக்கு உகந்த கொள்கையை அரசு வகுத்துள்ளது. சில முக்கியமான துறைகளைத் தவிர குறு சிறு மற்றும் நடுத்தரத் தொழில்கள் துறை உட்பட பிற துறைகளில் அந்தந்த துறைகளுக்கான சட்டங்கள், விதிமுறைகள், பாதுகாப்பு நிபந்தனைகள் ஆகியவற்றுக்கு உட்பட்டு தன்னியக்க முறையில் 100% முதலீடு வரவேற்கப்படுகிறது.
குறு சிறு மற்றும் நடுத்தரத் தொழில்கள் துறையில் வெளிநாட்டு முதலீட்டின் நன்மை, தீமைகள் குறித்து அமைச்சகத்தின் போட்டித்தன்மை மற்றும் நம்பகத்தன்மையின் கண்ணோட்டத்தில் குறிப்பிட்ட ஆய்வு எதுவும் நடத்தப்படவில்லை.
இத்தகவலை, மாநிலங்களவையில் இன்று எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில், குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் துறை இணையமைச்சர் திரு பானு பிரதாப் சிங் வர்மா தெரிவித்தார்.
******
AP/SMB/IDS
(रिलीज़ आईडी: 1882824)
आगंतुक पटल : 236