சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் மீதான தடை

प्रविष्टि तिथि: 08 DEC 2022 2:45PM by PIB Chennai

ஒருமுறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு விதிக்கப்பட்ட தடை குறித்த அறிவிக்கை, ஆகஸ்ட் 12, 2021 அன்று வெளியிடப்பட்டது. இது ஜூலை 1, 2022 அன்று முதல் அமலுக்கு வந்தது. ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களை உற்பத்தி செய்யும் நிறுவனங்களுக்கு மாற்றுத் தொழிலில் ஈடுபடுவதற்கான அவகாசம் வழங்கப்பட்டது. ஒரு முறை மட்டும் பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களின் உற்பத்தியில் ஈடுபட்ட நிறுவனங்கள் மாற்றுத் தொழில் ஈடுபடுவதற்காக சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் துறை அமைச்சகத்தின் திட்டங்கள் மூலம் ஆதரவளிக்கப்படுகிறது. தொழில்நுட்ப மேம்பாடு, விழிப்புணர்வை ஏற்படுத்துதல், சந்தை வாய்ப்பு, உள்கட்டமைப்புக்கான ஆதரவு ஆகியவற்றை இத்திட்டங்கள் அளிக்கின்றன. மாற்றுப் பொருட்கள் உற்பத்தி மூலம் புதிய வேலைவாய்ப்புகள் உருவாகும்.

இத்தகவலை மாநிலங்களவையில் மத்திய சுற்றுச்சூழல் வனம் மற்றும் பருவ நிலை மாற்றத் துறைக்கான இணையமைச்சர் திரு அஸ்வினி குமார்  சௌபே கேள்வி ஒன்றுக்கு எழுத்துப்பூர்வமாக தெரிவித்துள்ளார்.

**************

AP/IR/RS/IDS


(रिलीज़ आईडी: 1881865) आगंतुक पटल : 221
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , Gujarati , Telugu