பெட்ரோலியம் மற்றம் இயற்கை எரிவாயு அமைச்சகம்

எஸ்ஏடிஏடி திட்டத்தின் கீழ் இலக்கு

Posted On: 08 DEC 2022 2:41PM by PIB Chennai

2023-24ஆம் ஆண்டு வாக்கில், ஆண்டுக்கு 15 மில்லியன் மெட்ரிக் டன் உயிரி எரிவாயு  உற்பத்தி செய்யும் 5,000 நிலையங்களை அமைக்க, கட்டுப்படியான போக்குவரத்தை நோக்கிய நீடித்த மாற்று திட்டத்தை, மத்திய அரசு 2018ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் தொடங்கியுள்ளது.

2022 அக்டோபர் 31ம்தேதி வரை எண்ணெய் மற்றும் வாயு சந்தைப்படுத்துதல் நிறுவனங்கள், கொள்முதல் செய்யும் நிறுவனங்களுக்கு 3,694 ஒப்பந்த ஆவணங்களை வழங்கியுள்ளது.

புதைபடிம எரிபொருட்கள் பயன்பாடு மற்றும் இறக்குதியைக் குறைக்கும் வகையில் மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது. இதன் அடிப்படையில், உயிரி எரிபொருட்களை ஊக்குவிக்க உத்திகள் வகுக்கப்பட்டுள்ளன.

மக்களவையில்,எழுத்து மூலம் அளித்த பதிலில் மத்திய பெட்ரோலியத்துறை இணை அமைச்சர் திரு ராமேஸ்வர் தெலி இதனைத் தெரிவித்துள்ளார்.

------

AP/PKV/KPG/IDS

 



(Release ID: 1881835) Visitor Counter : 155


Read this release in: Kannada , English , Urdu , Kannada