சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

தரம் குறைந்த கட்டுமானப் பொருட்கள் உபயோகம்

இடுகை இடப்பட்ட நாள்: 08 DEC 2022 12:46PM by PIB Chennai

மத்திய சாலைப்போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சகம் மற்றும் இந்திய சாலைகள் அமைப்பு விதி முறைகளில் குறிப்பிட்டுள்ளபடி, தேசிய நெடுஞ்சாலைகள் அமைக்கப்படுவதை உறுதி செய்வதற்கான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.  குறிப்பிட்ட விதிமுறைகளின்படி சாலைகள் அமைக்கப்படாவிட்டால்,  ஒப்பந்தப் பணிகள் நிறைவடைந்துள்ளதாக கருதப்படாது.  கட்டுமானத் தரத்தை உறுதி செய்ய அமைச்சகத்தின் சார்பில் ஆலோசகர்கள் நியமிக்கப்பட்டு, பணியிடங்களில் நாள்தோறும் மேற்பார்வை செய்யப்படுகிறது. இதில் குறைபாடுகள் ஏதேனும் கண்டறியப்பட்டால், அதை சரி செய்வதற்கான பணிகளை மேற்கொள்ளுமாறு ஒப்பந்ததாரர்களின் கவனத்திற்கு எடுத்துச் செல்லப்படுகிறது.

இத்தகவலை மக்களவையில் கேள்வி ஒன்றுக்கு மத்திய  சாலைப்போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் திரு நிதின் கட்கரி எழுத்துப்பூர்வமாக கூறினார்.

**************

AP/IR/RS/IDS


(வெளியீட்டு அடையாள எண்: 1881765) வருகையாளர் எண்ணிக்கை : 204
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , Telugu , Malayalam