வெளியுறவுத்துறை அமைச்சகம்

ராஜஸ்தானின் உதய்பூரில் நடைபெறும் இந்தியாவின் ஜி-20 தலைமைத்துவம் குறித்த முதலாவது ஷெர்பா கூட்டத்தின் 2-வது நாள் விவாதம்

Posted On: 05 DEC 2022 6:22PM by PIB Chennai

ராஜஸ்தானின் உதய்பூரில் 4-ந் தேதி முதல், 7-ந் தேதி வரை நடைபெறும் இந்தியாவின் ஜி-20 தலைமைத்துவம் குறித்த முதலாவது ஷெர்பா கூட்டத்தின் 2-வது நாளில் இந்தியாவின் ஜி-20 முன்னுரிமைகள் குறித்த விவாதம் தொடங்கியது.

முதல் நாளில்  கலந்துரையாடல்கள் , சாதாரண முறையிலான கலந்துரையாடல்கள் என பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. 2-ம் நாளான இன்று இந்தியாவின் ஜி-20 தலைமைத்துவத்தின் 5 முக்கிய முன்னுரிமைகள் குறித்து விவாதம் நடைபெற்றது. இது தவிர தொழில்நுட்ப மாற்றம், பசுமை மேம்பாடு மற்றும் சுற்றுச்சூழலுக்கான வாழ்க்கை முறை என மேலும் 2 அமர்வுகளும் நடைபெற்றன. ஜி-20 நாடுகளின் பிரதிநிதிகளுக்கிடையே சாதாரண முறையிலான உரையாடல்களும் நடைபெற்றன.

இந்த முதலாவது ஷெர்பா கூட்டத்திற்கு இந்தியாவின் ஜி-20 பிரதிநிதி (ஷெர்பா) திரு அமிதாப் காந்த் ஏற்பாடு செய்திருந்தார். அவரது தலைமையில் 13 பணிக்குழுக்கள் இதில் இடம் பெற்றிருந்தன. இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட ஜி-20 நாடுகளின் பிரதிநிதிகளுக்கு இந்திய பாரம்பரிய உடைகள் மற்றும் தலைப்பாகை அளிக்கப்பட்டிருந்தது. மாலையில் தேனீர் விருந்துடன் உரையாடல்கள் நடைபெற்றன.  உதய்பூரின் ஜக்மந்திரில் இரவு உணவுடன் 2-ம் நாள் நிகழ்ச்சிகள் நிறைவுபெற்றன.

ஜி-20 பிரதிநிதிகள் அழகிய பாரம்பரியம் மிக்க பளிங்கு கட்டிடக்கலைக்கு பெயர்போன உதய்பூரை சுற்றிப்பார்த்தனர்.  இங்கு நடைபெறும் விவாதங்கள் பிரதிநிதிகளுக்கு ஒரு தனித்துவமான இந்திய அனுபவத்தை வழங்கி வருகிறது.

**************

(Release ID: 1880997)

Sri/PKV/AG/RR



(Release ID: 1881087) Visitor Counter : 219


Read this release in: English , Urdu , Hindi , Marathi , Odia