கலாசாரத்துறை அமைச்சகம்

ஜி-20 தலைமைப் பொறுப்பை இந்தியா ஏற்றுக்கொண்டுள்ளதை குறிக்கும் வகையில் இந்திய தொல்லியல் துறை, 1 முதல் 7-ந் தேதி வரை 100 பாரம்பரிய நினைவு சின்னங்களில் ஜி-20 இலச்சினையுடன் கூடிய அலங்கார விளக்குகளை அமைத்துள்ளது

Posted On: 05 DEC 2022 5:46PM by PIB Chennai

ஜி-20 தலைமைப் பொறுப்பை இந்தியா கடந்த  முதல்  தேதி அன்று ஏற்றுக்கொண்டுள்ளதை குறிக்கும் வகையில், மத்திய கலாச்சார அமைச்சகத்தின் கீழ் இயங்கும் இந்திய தொல்லியல் துறை, 1 முதல் 7-ந் தேதி வரை 100 பாரம்பரிய நினைவு சின்னங்களில் ஜி-20 இலச்சினையுடன் கூடிய அலங்கார விளக்குகளை அமைத்துள்ளது. இந்த நினைவுச்சின்னங்கள் ஒளிரும் விளக்குகளுடன் சிறப்பான எழிலை பிரதிபலித்து வருகின்றன.

புதுதில்லியில் உள்ள ஹூமாயூன் கல்லறை கட்டிடம், செங்கோட்டை, புராதான கோட்டை, குதுப் மினார், ஐதராபாத்தில் உள்ள கோல்கொண்டா கோட்டை, ஜம்மு காஷ்மீரில் உள்ள சங்கராச்சாரியா கோயில், தெலுங்கானாவில் உள்ள ராமப்பா கோயில், கர்நாடகாவின் ஹம்பியில் உள்ள ஸ்ரீவிருப்பாச்சா கோயில், பீகாரின் நலந்தா மகாவிஹாரா உள்பட பல்வேறு நினைவுச்சின்னங்களில் அலங்கார விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளன.

**************

(Release ID: 1880991)

Sri/PKV/AG/RR



(Release ID: 1881086) Visitor Counter : 203