ஜவுளித்துறை அமைச்சகம்
டெக்னோடெக்ஸ் 2023 மும்பையில் 2023 பிப்ரவரி 22 முதல் 24 வரை நடைபெறவுள்ளது
Posted On:
05 DEC 2022 4:46PM by PIB Chennai
டெக்னிக்கல் டெக்ஸ்டைல்ஸ் பற்றிய இந்தியாவின் முதன்மை நிகழ்வான - 'டெக்னோடெக்ஸ் 2023' மும்பையில் 2023, பிப்ரவரி 22 முதல் 24 வரை நடைபெறவுள்ளது.. இந்தியத் தொழில்நுட்ப ஜவுளித் துறையின் மிகப்பெரிய நிகழ்வான இது, இதன் பங்கேற்பாளர்களுக்கு எளிதாக அணுகுதல், இந்தியா மற்றும் உலகெங்கிலும் உள்ள சிஇஓக்கள, உற்பத்தியாளர்கள், கொள்முதல் மேலாளர்கள் மற்றும் விநியோகிப்பாளர்களைவ சந்திப்பதற்கு நெட்வொர்க்கிங் வாய்ப்புகளை வழங்குதல் ஆகியவற்றில் கவனம் செலுத்துகிறது. தேசிய தொழில்நுட்ப ஜவுளி இயக்கத்தின் கீழ், இந்திய வர்த்தக சங்கங்களின் கூட்டமைப்புடன் இணைந்து, மத்திய அரசின் ஜவுளி அமைச்சகம் இந்த நிகழ்வை ஏற்பாடு செய்துள்ளது. இந்தியா ஜி-20 தலைமைப் பொறுப்பை ஏற்றுள்ள மிகவும் பொருத்தமான நேரத்தில் டெக்னோடெக்ஸ் 2023 ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்று மத்திய ஜவுளித்துறை இணை அமைச்சர் திருமதி தர்ஷனா ஜர்தோஷ் தெரிவித்தார்.
மும்பையில் இன்று (05.12.2022) நடைபெற்ற டெக்னோடெக்ஸ் 2023க்கான அறிமுக நிகழ்வில் உரையாற்றிய அவர், டெக்னோடெக்ஸ் 2023, உலக அளவில் வேகமாக வளர்ந்து வரும் தொழில்முனைவோருக்கு நல்ல வாய்ப்பை வழங்குகிறது என்றார். "தொழில்நுட்ப ஜவுளித் துறையில் புத்தொழில்களின் உயர் திறனைக் கருத்தில் கொண்டு, டெக்னோடெக்ஸ் 2023, புத்தொழில் முயற்சிகளை மேம்படுத்துவதற்கும், சிறந்த நடைமுறைகள் குறித்த அறிவுப் பரிமாற்றத்தை ஊக்குவிப்பதற்கும் மற்றும் புத்தொழில்களுக்கான தொழில் முனைவோர் சூழல் திறன்களை மேம்படுத்துவதற்குமான விவாதங்களில் கவனம் செலுத்தும்". நிகழ்வின் முக்கியத்துவம், இந்தத் துறைக்கு அமைச்சகம் வழங்கும் முக்கியத்துவம் மற்றும் உச்சிமாநாட்டை பயனுள்ளதாக மாற்றுவதில் அர்த்தமுள்ள விவாதங்கள் பற்றி இந்தியாவில் உள்ள வெளிநாட்டுத் தூதரகங்கள், ஊடக நிறுவனங்கள் மற்றும் முன்னணி தொழில்நுட்ப ஜவுளித் துறையினருக்கு ஆர்வத்தை உருவாக்க இந்த அறிமுக நிகழ்வுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
பிப்ரவரி 2023ல் 15,000க்கும் அதிகமான வணிகப் பார்வையாளர்களை அமைச்சகமும் தொழில்துறையும் எதிர்நோக்குகின்றன. மேலும் பத்தாவதாக நடைபெறும் இந்த நிகழ்வில், மத்திய அரசு மற்றும் வெளிநாடுகளில் உள்ள அனைத்து தூதர்கள் மற்றும் சிஇஓக்கள், பயனாளர் தொழில்களுடன் ஒரு பெரிய உரையாட லை எதிர்பார்க்கின்றனர்.
AP/SMB/IDS
**************
(Release ID: 1881028)
Visitor Counter : 213