மத்திய பணியாளர் தேர்வாணையம்
இந்தியக் குடிமைப் பணிகள் தேர்வு வாரியம் மாற்றுத்திறனாளி விண்ணப்பத்தாரர்களுக்கு திருத்தப்பட்ட அறிவிப்பு
प्रविष्टि तिथि:
05 DEC 2022 2:53PM by PIB Chennai
இந்தியக் குடிமைப் பணிகள் தேர்வு வாரியம் நடத்தும் கல்வித் துறையில் உள்ள காலியிடப் பணிகளுக்கான தேர்வு குறித்து மாற்றுத்திறனாளி விண்ணப்பத்தாரர்களுக்கு திருத்தப்பட்ட அறிவிப்பை தில்லி அரசு வெளியிட்டுள்ளது.
கல்வித்துறையின் இயக்குநரகத்தின் துணை முதல்வர் உள்ளிட்ட பதவிகளுக்கு இந்த்த் தேர்வு நடத்தப்படுகிறது. யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷனின் விளம்பரம் எண்.10/2022, பொருள் எண்.09, காலியிடம் எண். 22051009328, 28.05.2022 அன்று வெளியிடப்பட்டது. அதில் கல்வித் துறை இயக்குநரகத்தின் துணை முதல்வர் உள்ளிட்ட 131 பணியிடங்கள் (45 ஆண் மற்றும் 86 பெண்) காலியாக உள்ளன. ஆன்லைன் மூலம் விண்ணப்பங்களைச் சமர்ப்பிப்பதற்கான இறுதித் தேதி 16.06.2022 அன்று 23:59 மணியாகும். மாற்றுத்திறனாளிகளுக்கான மாநில ஆணையத்தின் நீதிமன்றத்தின் வழிகாட்டுதலின்படி, பின்வரும் திருத்தங்களை செய்துள்ளது:
மேற்கூறிய பதவிக்கு, இரு கைகளும் பாதிக்கப்பட்ட (பிஏ) விண்ணப்பதாரர்களுக்கான விண்ணப்பக் கால அவகாசம் 01.12.2022 முதல் 09.12.2022 வரை (16:59 மணிநேரம்) ஆகும். விண்ணப்பத்தை நிரப்புவதற்கான இணைப்பு https://upsconline.nic.in/ என்ற இணையதளத்தில் உள்ளது.
இரண்டு கைகளும் பாதிக்கப்பட்ட (பிஏ) விண்ணப்பதாரர்கள் மட்டுமே மேற்கூறிய காலத்தில் விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள்.
தேர்வு 11.12.2022. தேதி அன்று திட்டமிட்டபடியே நடைபெறும். தேர்வு பாடத்திட்டம் போன்ற விவரங்கள் www.upsc.gov.in என்ற இணையதளத்தில் பார்க்கலாம்.
மேற்கூறிய விளம்பரத்தின் மற்ற விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளில் எந்தவித மாற்றமும் இல்லை.
**************
AP/GS/RS/IDS
(रिलीज़ आईडी: 1880961)
आगंतुक पटल : 175