கலாசாரத்துறை அமைச்சகம்

மத்திய கலாச்சார அமைச்சகம், அஞ்சல் துறையின் முன்முயற்சியில் “அஞ்சல் அறை”, கடிதம் எழுதும் திருவிழா

Posted On: 04 DEC 2022 7:28PM by PIB Chennai

விடுதலையின் அமிர்த பெருவிழாவை முன்னிட்டு அஞ்சல் துறையுடன் இணைந்து மத்திய கலாச்சார அமைச்சகம் அஞ்சல் அறை (டாக்ரூம்) என்ற புகழ்பெற்ற கடிதம் எழுதும் திருவிழாவை புதுதில்லியில் இன்று நடத்தியது.

இந்தியாவில் அருகி வரும் கடிதம் எழுதும் முறையை புதுப்பிக்கும் நோக்கத்தோடு இந்திய அஞ்சல் துறை, மத்திய கலாச்சார அமைச்சகம், காந்தி ஸ்மிருதி மற்றும் தர்ஷன் சமிதி ஆகியவை இணைந்து இந்த நிகழ்ச்சியை நடத்தின.

நிகழ்ச்சியில் பேசிய மத்திய கலாச்சார அமைச்சகத்தின் இணைச் செயலாளர் திருமதி உமா நந்தூரி, நமது வரலாற்றுச் சிறப்புமிக்க மற்றும் கலாச்சார புகழ்பெற்ற கையெழுத்து தொடர்பியலை புதுப்பிக்கும் நோக்கத்தோடு இந்த முன்முயற்சி மேற்கொள்ளப்பட்டிருப்பதாகவும், இது போன்ற முயற்சிகள் தகவல் தொடர்பு மற்றும் கற்றலுக்காக கடிதங்களை எழுதுவதற்கு எழுதுகோல் மற்றும் காகிதங்களைத் தேர்ந்தெடுப்பதற்கு மக்களை ஊக்குவிக்கும் என்றும் தெரிவித்தார்.

தபால்தலை சேகரிப்பு, கையெழுத்து, எழுது பொருள் வடிவமைப்பு, கையெழுத்தை மேம்படுத்துதல், வரைபடவியல், ஆரிகாமி போன்ற படைப்பாற்றல் சார்ந்த செயற்பாடுகளும் நிகழ்ச்சியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.

******

(Release ID: 1880828)

SRI/RB/RR



(Release ID: 1880886) Visitor Counter : 120