பணியாளர் நலன், பொதுமக்கள் குறை தீர்ப்பு மற்றும் ஓய்வூதியங்கள் அமைச்சகம்
நிர்வாக சீர்திருத்தங்கள் மற்றும் சிறந்த ஆளுகைக்காக மகாராஷ்டிரா அரசும், நிர்வாக சீர்திருத்தங்கள் மற்றும் பொதுமக்கள் குறைதீர்ப்பு துறையும் கைகோர்ப்பு
Posted On:
02 DEC 2022 11:29AM by PIB Chennai
மகாராஷ்டிர மாநில அரசின் சிறந்த ஆளுகைக்கான குழு தலைவர் திரு சுரேஷ்குமாரின் அழைப்பின் பேரில் நிர்வாக சீர்திருத்தங்கள் மற்றும் சிறந்த ஆளுகைக்காக, நிர்வாக சீர்திருத்தங்கள் மற்றும் பொதுமக்கள் குறைதீர்ப்பு துறைக்கும் மகாராஷ்டிரா அரசுக்கும் இடையே ஒருங்கிணைப்பிற்கான திட்டங்களை உறுதிப்படுத்துவதற்காக துறையின் செயலாளர் திரு வி. ஸ்ரீனிவாஸ் தலைமையிலான 6 பேர் கொண்ட துறையின் பிரதிநிதிகள் குழு டிசம்பர் 1-ஆம் தேதி மும்பை சென்றது.
சிறந்த ஆளுகைக்கான குழுவின் தலைவர் மற்றும் உறுப்பினர்கள்; மகாராஷ்டிர அரசின் தலைமைச் செயலாளர், கூடுதல் தலைமைச் செயலாளர் மற்றும் மூத்த அதிகாரிகள்; மண்டல ஆணையர்கள், மாவட்ட ஆட்சியாளர்கள் உள்ளிட்ட பலருடன் மூன்று கட்ட கூட்டங்களை பிரதிநிதிகள் குழு நடத்தியது.
ஒருங்கிணைப்பிற்கான திட்டம் குறித்து மகாராஷ்டிர முதலமைச்சரிடம் பிரதிநிதிகள் குழு எடுத்துரைத்தனர். செயலாளர் திரு வி. ஸ்ரீநிவாஸ், இணைச் செயலாளர் திரு என். பி. எஸ், ராஜ்புட், இயக்குநர் திரு கே. சஞ்சயன், இணைச் செயலாளர்கள் திரு பார்த்தசாரதி பாஸ்கர் ஸ்ரீமதி சரிதா தனேஜா, நேருதவிச் செயலாளர் திரு சந்தோஷ் குமார் ஆகியோர் இந்தக் குழுவில் இடம் பெற்றுள்ளனர்.
**************
SM/RB/RJ
(Release ID: 1880450)
Visitor Counter : 167