உள்நாட்டு விமானப் போக்குவரத்து அமைச்சகம்
azadi ka amrit mahotsav

நாட்டின் 3 விமான நிலையங்களில் டிஜி யாத்ரா தொழில்நுட்பத்தை மத்திய விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் திரு ஜோதிராதித்ய சிந்தியா தொடங்கிவைத்தார்

Posted On: 01 DEC 2022 4:32PM by PIB Chennai

புதுதில்லி, வாரணாசி, பெங்களூரு ஆகிய 3 விமான நிலையங்களில் டிஜி யாத்ரா தொழில்நுட்பத்தை மத்திய விமானைப் போக்குவரத்துத் துறை அமைச்சர் திரு ஜோதிராத்திய சிந்தியா புதுதில்லி இந்திரா காந்தி விமான நிலையத்திலிருந்து இன்று (01.12.2022) தொடங்கிவைத்தார்.  முக அடையாள தொழில்நுட்பம் வாயிலாக விமான நிலையத்திற்குள் பயணிகள் ஊழியர்களை நேரடியாக தொடர்பு கொள்வதை தவிர்த்து விரைவாக செல்லும் வகையில் டிஜி யாத்ரா வடிவமைக்கப்பட்டுள்ளது.

விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சகத்தின் கீழ் டிஜி யாத்ரா அமைப்பு உருவாக்கிய டிஜி யாத்ரா திட்டம் குறித்து பேசிய அமைச்சர், பயணிகள் தங்களது முக அடையாளம் மூலம் பெறப்பட்ட விமானம் ஏறுவதற்கான அனுமதி அட்டையுடன் நுழைவு பகுதிகளுக்கு எவ்வித ஆவணங்கள் இன்றி ஊழியர்களை நேரடியாக தொடர்பு கொள்ளாமல் செல்ல முடியும் என்று தெரிவித்தார். இந்த வசதியைப் பயன்படுத்திக் கொள்ள ஆதார் மற்றும் சுய புகைப்படம் மூலம் டிஜி யாத்ரா செயலியில் பதிவு செய்து கொள்ளவேண்டும் என்று கூறினார்.

**************

SM/IR/KPG/IDS


(Release ID: 1880365) Visitor Counter : 195


Read this release in: English , Urdu , Hindi , Marathi