பாதுகாப்பு அமைச்சகம்
நவம்பர் மாதத்தில் ஆண்டு வாழ்நாள் சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டிய, ஸ்பார்ஷ் ஓய்வூதியதாரர்களுக்கு மேலும் 3 மாதங்களுக்கு ஓய்வூதியத்தை நீட்டிக்க பாதுகாப்பு அமைச்சகம் ஒப்புதல்
Posted On:
30 NOV 2022 3:34PM by PIB Chennai
நவம்பர் மாதத்தில் ஆண்டு வாழ்நாள் சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டிய, ஸ்பார்ஷ் எனப்படும் பாதுகாப்புத்துறை ஓய்வூதிய நிர்வாக நடைமுறைக்கு மாறிய ஓய்வூதியதாரர்களுக்கு மேலும் 3 மாதங்களுக்கு ஓய்வூதியத்தை நீட்டிக்க வங்கிகளுக்கு பாதுகாப்பு அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது. ஆண்டு அடையாளம், வாழ்நாள் சான்றிதழ் ஆகியவை மாதாந்திர ஓய்வூதியத்தை ஒவ்வொரு மாதமும் தடையின்றி, உரிய நேரத்தில் பெற கட்டாயம் என வலியுறுத்தப்பட்டுள்ளது. எனவே, பாதுகாப்புத்துறையை சேர்ந்த அனைத்து ஓய்வூதியதாரர்களும் பிப்ரவரி 2023-க்குள் ஆண்டு அடையாளம்/ வாழ்நாள் சான்றிதழ் நடைமுறைகளை நிறைவு செய்து சுமூகமான ஓய்வூதிய செயல்முறைகளை உறுதி செய்து கொள்ளுமாறு கேட்டு கொள்ளப்பட்டுள்ளது.
கீழ்க்கண்ட வழிகளின் மூலம் ஆண்டு அடையாளம் மற்றும் வாழ்நாள் சான்றிதழ் நடைமுறைகளை மேற்கொள்ளலாம்:
- டிஜிட்டல் ஜீவன் பிரமாண் மூலமாக இணையதளத்திலும், ஜீவன் பிரமாண் முக அடையாள செயலி மூலமாக மொபைல் போன்களிலும் இதனை மேற்கொள்ளலாம். செயலியை நிறுவுதல் மற்றும் பயன்படுத்துதல் ஆகியவற்றுக்கு கீழ்க்கண்ட இணையதள இணைப்பை பார்க்கவும் https://jeevanpramaan.gov.in/package/documentdowload/JeevanPramaan_FaceApp_3.6_Installation
- https://sparsh.defencepension.gov.in/ என்ற இணையதளத்திலும் ஆண்டு அடையாளம்/ வாழ்நாள் சான்றிதழ் நடைமுறைகளை மேற்கொள்ளலாம்.
- அருகிலுள்ள பொதுசேவை மையங்களிலும் இந்த பணியை மேற்கொள்ள இயலும். பொதுசேவை மையங்கள் தொடர்பான விவரங்களுக்கு https://findmycsc.nic.in/ என்ற இணையதளத்தை பார்க்கலாம். ஸ்பார்ஷ் சேவை மையங்கள் தொடர்பான தகவல்களுக்கு https://sparsh.defencepension.gov.in/?page=serviceCentreLocator. என்ற இணையதளத்தை பார்க்கலாம்.
- 2016-ஆம் ஆண்டுக்கு முன் ஓய்வு பெற்று ஸ்பார்ஷ் முறைக்கு இன்னும் மாறாத ஓய்வூதியதாரர்களின் வாரிசுதாரர்கள், வாழ்நாள் சான்றிதழை பெற கடந்த ஆண்டுகளில் மேற்கொண்ட நடைமுறைகளையே மேற்கொள்ளலாம். ஜீவன் பிரமாண் மூலம் வாழ்நாள் சான்றிதழ் பெறும்போது சம்பந்தப்பட்ட அலுவலகங்களை தேர்வு செய்ய வேண்டும்.
**************
SM/PLM/KG/KRS
(Release ID: 1880007)
Visitor Counter : 220