தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம்

டவுன்ஸ் சிண்ட்ரோம் உள்ள ஒருவரின் போராட்டங்களை கூறும் ஈரானிய திரைப்படமான ‘நர்கேசி’ 53வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் ஐசிஎஃப்டி-யுனெஸ்கோ காந்தி பதக்கத்தை வென்றது

Posted On: 28 NOV 2022 7:52PM by PIB Chennai

டவுன்ஸ் சிண்ட்ரோம் உள்ள ஒருவரின் போராட்டங்களை கூறும் ஈரானிய திரைப்படமான ‘நர்கேசி’ 53வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் ஐசிஎஃப்டி-யுனெஸ்கோ காந்தி பதக்கத்தை வென்றுள்ளது. மகாத்மா காந்தியின் அமைதி, சகிப்புத்தன்மை மற்றும் அகிம்சை ஆகிய கொள்கைகளை சிறப்பாக பிரதிபலிக்கும் படத்திற்காக இந்த விருது வழங்கப்படுகிறது.

டவுன் சிண்ட்ரோம் உள்ள ஒரு மனிதனைப் பற்றிய இத்திரைப்படம், இந்த நோய் அவன் வாழ்க்கைக்கு எப்படி சுமையாக உள்ளது, இதனால் அவன் எதிர் கொள்ளும் சவால்களைப் பற்றியது. கருணை மற்றும் மென்மை ஆகிய இரண்டு குணங்கள் இந்த படத்தில் தத்ரூபமாக சித்தரிக்கப்பட்டுள்ளன.

இயக்குனர் பயம் எஸ்கந்தாரி தனது வீடியோ செய்தியில் ஐ.எஃப்.எஃப்.ஐ நடுவர் குழுவுக்கு நன்றி தெரிவித்தார். "இந்த விருதைப் பெறுவது ஒரு பெரிய மரியாதை, என்னை நம்பியவர்களுக்கும், இந்த திரைப்படத்தை உருவாக்குவதற்கு உதவியாக இருந்தவர்களுக்கும், குறிப்பாக எனது குடும்பத்தினருக்கும், என் அன்பான மனைவி  மற்றும் நர்கேசியின் அனைத்து நடிகர்கள் மற்றும் குழுவினருக்கு எனது நன்றிகளை தெரிவிக்க விரும்புகிறேன்.", என்று கூறினார்.

அவர் மேலும் கூறுகையில், 'டவுன்ஸ் சிண்ட்ரோம்' உள்ளவர்கள் கடவுளால் அனுப்பப்பட்ட தேவதைகள் என்று தான் நம்புவதாகவும், அவர்களின் வாழ்க்கையைப் பற்றி கேட்க வேண்டிய பல அழகான கதைகள் உள்ளன என்றும் கூறினார்.

இந்த ஆண்டு இந்த விருதுக்காக உலகின் பல பகுதிகளில் இருந்து 9 படங்கள் தேர்வு செய்யப்பட்டன.

This year, nine films from across the globe were chosen to compete for the ICFT-UNESCO Gandhi Medal. The films that competed in this category are:

•    இந்தப் பிரிவில் போட்டியிட்ட படங்கள்:

•    ஏ டேல் ஆப் டூ சிஸ்டர்ஸ் (வங்காளதேசம் | 2022)

•    பார்ச்சூன் (தஜிகிஸ்தான் | 2022)

•    தாய் (பல்கேரியா | 2022)

•    நானு குசுமா (இந்தியா | 2022)

•    நர்கேசி (ஈரான் | 2021)

•    பலோமா (பிரேசில், போர்ச்சுகல் | 2022)

•    சவுதி வெள்ளக்கா (இந்தியா | 2022)

•    தி காஷ்மீர் பைல்ஸ் (இந்தியா | 2021)

•    வைட் டாக் (கனடா | 2022)

நர்கேசி படம் பற்றி:

இயக்குனர் & திரைக்கதை எழுத்தாளர்: பயம் எஸ்கந்தாரி

தயாரிப்பாளர்: ஷஹாப் ஹொசைனி

ஒளிப்பதிவாளர்: முகமது நம்தார்

நடிகர்கள்: ஹொசைன் எஸ்கந்தாரி, ஷஹாப் ஹொசைனி, கஜல் நாசர்

 

கதை சுருக்கம்

டவுன்ஸ் சிண்ட்ரோம் கொண்ட ஒரு மனிதனின் போராட்டங்களை இப்படம் சித்தரிக்கிறது. அவனது கனவு தனக்கான உண்மை காதலைக் கண்டறிந்து திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்பது. அதற்காக அவன் எதையும் செய்ய தயாராக உள்ளான்.  ஆனால் இந்த உலகில் அவனுக்கும் அவனது அன்பிற்கும் இடமில்லை என்று தெரிகிறது. இவை அனைத்தும் அவனக்கு ஒரு பரிசு கிடைக்கும்போது மாறுகிறது.

************

GS / SRI / DL

 



(Release ID: 1879679) Visitor Counter : 156