தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம்
‘க்ளீன்-ஏ-தோன்’ என்பது “குப்பையை கொட்டவும் மாட்டோம். அதைச் செய்ய அனுமதிக்கவும் மாட்டோம்” என்ற இயக்கமாகும்
இந்திய சர்வதேச திரைப்பட விழாவின் கடைசி நாளில், மிராமர் கடற்கரையை தூய்மைப்படுத்தும் நடவடிக்கை தொடங்கியது. கோவா அரசுடன் இணைந்து திவ்யாஜ் அறக்கட்டளை மற்றும் பாம்லா அறக்கட்டளையால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள, க்ளீன்-ஏ-தோன் தூய்மை நடவடிக்கைகள் மூலம், நமது சுற்றுப்புறங்களை சுத்தமாக வைத்திருக்கும் வழிமுறைகளை ஊக்குவிக்கும் ஒரு முயற்சியாகும்.
இது கோவா மாநிலத்தில் வசிப்பவர்களுக்கு மட்டுமல்ல, சுற்றுலாப் பயணிகளுக்கும் பொருந்தும்.
இன்று காலை மீராமர் கடற்கரையில், கடற்கரையை தூய்மைப்படுத்தும் நிகழ்ச்சியுடன் நிகழ்வு கொடியசைத்து ஆரம்பித்து வைக்கப்பட்டது.
கோவா முதல்வர் டாக்டர் பிரமோத் பி சாவந்த், திவ்யாஜ் அறக்கட்டளையின் நிறுவனர் திருமதி அம்ருதா ஃபட்னாவிஸ், கோவா அமைச்சரவை உறுப்பினர்கள் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது.
திரைப் பிரபலங்களான ஜாக்கி ஷெராஃப், கரண் குந்த்ரா மற்றும் நடன இயக்குனர் ரெமோ டிசோசா போன்ற பாலிவுட் நடிகர்களும் க்ளீன்-ஏ-தானில் பங்கேற்றனர்.
கொடியேற்றும் நிகழ்வில், டாக்டர். சாவந்த், “எங்கள் கடற்கரைகளை நாங்கள் சுத்தமாக வைத்திருக்கிறோம், ஆனால் இந்த முயற்சி சுற்றுலாப் பயணிகளையும் சென்றடைவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
கோவா மக்கள்தொகையில் மிகப் பெரிய பங்கைக் கொண்ட சுற்றுலாப் பயணிகளும் இந்த முயற்சிகளில் இணைந்தால் மட்டுமே கோவாவை சுத்தமாகவும் பசுமையாகவும் வைத்திருக்க முடியும்.
************
SRI / GS / DL
(Release ID: 1879672)
Visitor Counter : 162